உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

"நரியும் அற்றே நாடினர் கொளினே”

என்பவை மரபியல் நூற்பாக்கள்(35,36)

கோழி என்னும் பொதுப் பெயர் சேவற்கோழி, பெட்டைக் கோழி எனப் பால்பிரிவு கொண்டு உரைக்கப்படும். இவற்றில் சேவல் என்பது தொல்காப்பியர் நாளில் பறப்பனவற்றுள் ஆண்பால்களுக்கெல்லாம் பெயராக இருந்துள்ளது. தோகை அமைந்த மயில், ஆண்பால் எனினும் அதனைச் சேவல் எனல் ஆகாது. அதன் பெண்மைச்சாயல், சேவல் பெயரீட்டுக்குத் தடையாகும் என்பது தொல்காப்பியம்.

"சேவற் பெயர்க்கொடை சிறகொடு சிவணும் மாயிரும் தூவி மயில்அலங் கடையே

என்பது. இதனைக் கூர்ந்தாராயும் பேராசிரியர், "தோகையுடைய வாகிப் பெண்பால் போலும் சாயல் ஆகலான் ஆண்பால் தன்மை ல என்பது கொள்க. எனவே செவ்வேள் ஊர்ந்து அமர்ந்த மயிற்காயின் அதுவும் நேரவும்படும்" என்கிறார். தொல்காப்பியர் சாயல் கருதி உரைத்தார்.பேராசிரியர் தொன்மம் (புராணம்) சுட்டும் முருகன் ஊர்தி, கொடி என்பவை கொண்டு கூறுகிறார்.

பறவைச் சேவல் பெயரைக் குதிரை ஆண்பாற்கு இயைத்துக் கொள்ளும் மரபைச் சுட்டுகிறார் தொல்காப்பியர்.

"குதிரையுள் ஆணினைச் சேவல் என்றலும்”

என்பது அது பேராசிரியல் இத்தொடர்க்கு, “குதிரையைச் சேவல் என்றல் இக்காலத்து அரிதாயிற்று. அதுவும் சிறகொடு சிவணாதாயினும் அதனைக் கடுவிசைபற்றிப் பறப்பது போலச் சொல்லுதல் அமையும்" என்பது கருத்து என்கிறார்.

எருமை ஆணினைக் கண்டி என்னும் வழக்கு தொல்காப்பியர் நாளில் இருந்தது என்பது "எருமையுள் ஆணினைக் கண்டி என்றலும்" என்பதால் புலப்படும். இதனைப் பேராசிரியர் "அது காணலாயிற்றில்லை" என்கிறார். அவ்வாறே, மூடு, கடமை என்னும் பெயர்களை ஆடுபெறும் என்னும் இடத்தில், "இவை இப்பொழுது வழக்கினுள் அரிய" என்கிறார் பேராசிரியர். (மர.94) ஆனால், திருச்சிராப்பள்ளி வட்டாரத்தில் ஆட்டிற்கு மூடு என்னும் வழக்கு உள்ளமை அறியக்கிடக்கிறது. இதில் இருந்து ஒரு செய்தி. ஒரு வழக்கு ஒருகாலத்து ஓரிடத்து இல்லை எனத் தோற்றம் தந்தாலும், எல்லாக்காலத்தும் எல்லா இடத்தும் இல்லாமல் -