உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியர் காலம்

235

"மாற்றுரும் கூற்றம் சாற்றிய பெருமை" அல்லவோ இது! நேற்று எம்மோடு மாந்தனாக இருந்தான் இன்று மாப்பெரு வீரனாய், அமரனாம் பெருமையுற்றான்! படையல் இட்டுப் படலைச் சார்த்தி வழிபடும் தெய்வப்பேறு பெற்றான் என்னும் பெருமையை அல்லவோ சுட்டுவது.

"பீடும் பெயரும் எழுதி அதற்தொறும் நாட்டிய பிறங்குநிலை நடுகல் லாகிய"

பெருமை அல்லவோ அது!

இதுகாறும் சொல்லப்பட்டவற்றால் முப்பாலுக்குத் தொல்காப்பியம் எத்தகுமுன்மையது என்பது விளங்கும்.

காப்பியக்காலத்திற்கு முற்பட்டது தொகை நூல் காலம். தொகைநூல் காலத்தொடு சேர்ந்தும் முந்தும் தோற்றமுற்றது திருக்குறள். திருக்குறளுக்கு முந்துறத் தோன்றியது தொல்காப்பியம் - என்னும் முறைமையைக் கொண்டு மேலே செல்வோம்.

தொன்முன்மை

திருக்குறள், தொகை நூல்கள் ஆயவற்றுக்கு முன்னரே தொல்காப்பிய வழக்குகள் மறைந்துபோயின. அவரே, தொல்லோர்வழக்கு என்று சொல்லிய வழக்குகள் பின்னவர்க்கு வாய்க்கும் என்பதற்கு இடமில்லையே! இவ்வாறான வழக்குகளைப் பழைய உரையாசிரியர்கள் அவவந் நூற்பா உரைகளிலேயே சுட்டியுளர். பின்னை ஆய்வாளர்களும் கூரிய சீரிய வகையில் கண்டு தொகுத்தும் உள்ளனர், விரிவுமிக்க அவற்றை முழுவதாகச் சுட்டாமல் சிலவற்றைச் சுட்டுவோம். அதுவே பெரிதாம் அளவில் நிற்பது:

தொல்காப்பியர் நாளில் பாட்டி என்றொரு சொல் வழங்கியது. இன்று நாம் பாட்டி என்பதற்குக் கொள்ளும் பொருள் தாய் தந்தையரைப் பெற்றவரைப் பாட்டி என்னும் முறைப்பெயராக அழைப்போம். சங்க நாளிலே பாட்டி என்றால் பண்ணிசைத்துப்பாடும் பாணன் மனைவியைக் குறித்தது. தொல்காப்பியர் காலத்திலோ பன்றி, நாய், நரி என்பவற்றைக் குறித்தது அது.

"பாட்டி என்பது பன்றியும் நாயும்"