உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

இவை, இருத்தல் என்னும் உரிப்பொருளும் அதன் சார்பும்.

ஈ 124. உறுப்பு நலன் அழிதல்

125. நெஞ்சொடு கிளத்தல்

126. நிறையழிதல்

127. அவர்வயின் விரும்பல்

128. குறிப்பறிவுறுத்தல்

இவை, இரங்கல் என்னும் உரிப்பொருளும் அதன் சார்பும்.

129. புணர்ச்சி விதும்பல்

130. நெஞ்சொடு புலத்தல்

131. புலவி

132. புலவி நுணுக்கம்

133. ஊடலுவகை

இவை, ஊடல் என்னும் உரிப்பொருளும் அதன் சார்பும். ஐந்தைந்து அதிகாரங்களுள்ளும் இடையே நிற்கும் அதிகாரம் உரிப்பொருள் பெயரொடும் ஒன்றியே நிற்றல் காண்க.

இவ்வாறெல்லாம் தொல்காப்பியர் வழியில் நூல் யாத்தவர் திருவள்ளுவர். தொல்காப்பியர் அகப்பொருளின் உயிர்ப்பாகக் கொண்ட உரிப்பொருளையே தம் யாப்பியலுக்கு ஏற்ப வள்ளுவர் அமைத்துக் கொண்ட திறம் அருமைமிக்கதாம்!

"முதல்கரு உரிப்பொருள் என்ற மூன்றே நுவலுங் காலை முறைசிறந் தனவே

பாடலுட் பயின்றவை நாடுங் காலை'

என்னும் அகத்திணை நூற்பா உரையில், உரையாளர் முதலிற் கருவும், கருவில் உரியும் ஒன்றின் ஒன்று சிறந்தவை என்றது எண்ணத்தக்கது.

"நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ் வுலகு'

என்னும் குறளில் வரும் பெருமையின் பொருளை மெய்யுற அறியத் தொல்காப்பிய அறிவு இல்லாக்கால் மங்கல வழக்கு என்றுதானே கொள்ளவேண்டும்!