உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியர் காலம்

233

திருக்குறளில் காமம் என்னும் சொல் 39 இடங்களில் உண்டு. ஈரிடங்களில் மட்டும் இன்பம் உண்டு! ஆங்கும் காமமும் உண்டு!

"காமப் பகுதி கடவுளும் வரையார்” "காமம் சான்ற கடைக்கோட் காலை' என்பன தொல்காப்பியம்.

தொல்காப்பியர் கூறும் உரிப்பொருள்களைக் கொண்டே காமத்துப்பாலைப் படைக்கின்றார் திருவள்ளுவர்.

புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் என்பவை தொல்காப்பியர் வைத்த உரிப்பொருள் வைப்பு முறை. அம் முறையே முறையாய் ஒவ்வோர் உரிப்பொருளுக்கும், ஒவ்வோர் ஐந்து அதிகாரமாய், ஐந்து உரிப்பொருள்களுக்கும் 25 அதிகாரங்கள் பாடிக் காமத்துப்பால் படைத்தவர் திருவள்ளுவர். காண்க.

அ.

109. தகையணங்குறுத்தல்

110. குறிப்பறிதல்

111. புணர்ச்சி மகிழ்தல்

112. நலம் புனைந்துரைத்தல்

173. காதற் சிறப்புரைத்தல்

வை, புணர்தல் என்னும் உரிப்பொருளும் அதன் சார்பும்.

ஆ.

114. நாணுத்துறவு உரைத்தல்

115. அலர் அறிவுறுத்தல்

116. பிரிவாற்றாமை

117. படர்மெலிந்து இரங்கல்

118. கண்விதுப்பு அழிதல்

இவை, பிரிதல் என்னும் உரிப்பொருளும் அதன் சார்பும்.

119. பசப்புறு பருவரல் 120. தனிப்படர் மிகுதி

121.நினைந்தவர் புலம்பல்

122. கனவு நிலை உரைத்தல்

123. பொழுதுகண்டு இரங்கல்