உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

"நுண்மையும் சுருக்கமும் ஒளியுடை மையும் மென்மை யும்என் றிவைவிளங்கத் தோன்றிக் குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம் ஏது நுதலிய முதுமொழி என்ப”.

என்னும் முதுமொழி இலக்கணம் முற்றிலும் முப்பாலுக்கு ஒத்திருத்தலை உணர்ந்த பின்னைப் புலமையர் திருக்குறளை முதுமொழி எனப் பெயரீடு செய்து, குறளை விளக்கும் வகையில் தாம் இயற்றிய நூல்களுக்கு முதுமொழிமேல் வைப்பு, வள்ளுவர் முதுமொழி எனப் பெயரிட்டு வழங்கினர்.

திருக்குறள், கடவுள் வாழ்த்தில் கடவுள், வாழ்த்து என்னும் சொற்கள் இடம் பெறவில்லை. தொல்காப்பியர் வழங்கிய வழக்கு நோக்கியது அது.

என்று

"கொடிநிலை, கந்தழி வள்ளி என்ற

வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்

கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே'

வரன்முறைப்படுத்தித்

தொல்காப்பியர்

வைத்த

முறையையே முறையாய்க் கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் எனப் பாயிரமாய் வைத்துப் பாடியவர் திருவள்ளுவர்.

கொடி = மின்னற்கொடி என்பது சிலப்பதிகாரம். கந்து- கட்டு; அழி-அழிப்பது. கட்டற்றது அல்லது பற்றற்றது.வள் = கொடை வள்ளியோர்ப்படர்ந்து என்பது புறம். வள்ளியாவது அறப்பயன்; அதனை வலியுறுத்தல்.

"உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து வள்ளியம் என்னும் செருக்கு”

என்பது வள்ளுவம். 'வள்ளலார்' என்னும் பெயரின்பேறு அறிக.

இனி, 'இன்பம் என்பது எல்லா உயிர்க்கும்" என்பது தொல்காப்பியம். மக்கள் எய்தும் இன்பச் சுரப்பு அதன் வளர்வு விளைவு என்பவை கண்டு இட்டது காமம் என்னும் சொல். அது, கமம்-காமம் ஆயது.

கமம் நிறைந்து இயலும்' என்பது தொல்காப்பியம். வளர்பிறை படிப்படியே வளர்ந்து முழுமதி ஆவது ஒப்பது காமம்