உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியர் காலம்

231

புறநானூற்றின் முதற்பாடல் பாடிய முரஞ்சியூர் முடிநாகர். முதற்சங்கத்தவர் எனப்படுவார். அவர், பாரத நிகழ்வில் பங்கு கொண்டு இருதிறப் படையர்க்கும் போர்க்காலமெல்லாம் உணவு வழங்கிய பெருமையன் ஆகிய பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதனைப் பாடியுள்ளார். அத்தகு பாடல்கள் சில வள்ளுவர்க்கு முற்பட்டவை ஆகலாம். தொகைப் பாடல்கள் அனைத்துக்கும் பிற்பட்டதன்று திருக்குறள் என்பதைக் குறிப்பதற்குச் சொல்லப் பட்டது இதுவாம்.

இனித், தொல்காப்பியம் திருக்குறளுக்கு முற்பட்டது என்பதற்கு எள்ளத்தனை ஐயமும் இல்லாதிருக்க, ஐயுறும் அறிஞர்கள் இருந்தனர் என்பது. முன்னரே காணப்படது. மந்திரம் என்பதன் இலக்ணம்,

"நிறைமொழி மாந்தர் ஆணியிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப"

எனத் தமக்கு முந்தையர் கொண்ட தொல்பழமுறையை ஆசிரியர் தொல்காப்பியர் எடுத்துரைத்தார் என்பதை,

"நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும்'

99

என்னும் குறள் வழியதே எனக் கூறுவார். எப்படி ஏற்பார்?

"அறம் முதலாகிய மும்முதற் பொருள்"

என்று முக்கூறுபட்ட வாழ்வியலைத் தமிழர் நெறிப்படி வகுத்துக் காட்டி ஆணை ஆக்கியவர் தொல்காப்பியர் (செய்.105). வேறொரு வகையாம் இன்பியல் நோக்கிலே ஆய்வார்க்கு.

"இன்பமும் பொருளும் அறமும் என்றாங்கு அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்”

என்றவரும் அவர் (களவியல்-1).

இந்நெறியிலே முப்பால் ஆக்கியவர் திருவள்ளுவர். தொல்காப்பியர் குறுவெண்பாட்டு என்று கூறிய குறள்யாப்பையே தம் நூல் யாப்பாகக் கொண்டவர் திருவள்ளுவர். வெண்பா யாப்பின் முதன்மை குறுவெண்பா ஆதலால், அதனை மேற்கொண்டு பாடிய திருவள்ளுவர் முதற்பாவலர் எனப்பட்டதும் எண்ணத்தக்கது. குறுவெண்பாட்டு என்பதன் தொகைச் சொல்லே குறள் என்பது தெளிவானது.