உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

"நிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன் செய்திகொன்றோர்க் குய்தி இல்லென அறம்பா டிற்றே”

என்பது, இங்கே குறிக்கப்படும் குறள், திருக்குறளைக் கற்றார் எவர்க்கும் பளிச்செனப்படுவதாம்!

எந்நன்றி கொன்றார்க்கும் உண்வுண்டாம் உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு

என்பது அக்குறள் (770)

அறம் என்னும் நூற்பெயர், திருக்குறளை அன்றி வேறு எந்நூலையும் சுட்டுவது இல்லை! அறத்துப்பாலால் மட்டும் கொண்ட பெயரன்று அது! பொருள் நெறியாலும் அறம்! போர் நெறியாலும் அறம்! காதல் முதலாம் வாழ்வியல் நெறியாலும் அறம் பேசும் நூல் அஃதாதலின், நூற்பெயரே அறம் ஆயிற்றாம்.

ஆதலால், திருக்குறள் தொகை நூல்களாலும் மேற்கோளாக ஆளப்பட்ட பழமையுடையதாம்.

"முந்தை யிருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்'

என்னும் நற்றிணை எக்குறளை ஏற்றுப்பாடியது என்பது எவர்க்கும் வெளிப்பட விளங்குவதே.

"உண்டால் அம்மஇவ் வுலகம்" எனத் தொடங்கும் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதியார் பாடிய புறப்பாடல் (182), எக்குறளின் விரிவாக்கம் என்பதும் இருநூல்களையும் கற்றார்க்கு இனிது விளங்குவதேயாம். இவை,

"பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர்

"பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல்

மண்புக்கு மாய்வது மன்

என்னும் குறள்கள் என்பதை விளக்கவேண்டுவது இல்லை.

இக்குறிப்பால், நாம் அறியவேண்டுவது திருக்குறள் காப்பிய நூல்களுக்கு முற்பட்டது மட்டுமன்றித் தொகை நூல் பாடல்களும் மேற்கோளாகக் கொள்ளும் முன்மை உடையது என்பதாம்.