உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியர் காலம்

229

நிறைவுற்று அரங்கேறிய காலத்தும் இருந்தவர். ஆதலால், மேகலை சிலம்பு ஆகிய காப்பியங்கள் பிரிவறியா ஒருமையில், இரட்டைக் காப்பியங்கள் என ஆட்சிகொண்டன. சிலப்பதிகார நூற்கட்டுரை,

மணிமே கலைமேல் உரைப்பொருள் முற்றிய சிலப்பதி காரம் முற்றும் "

என்றே முடிகின்றது.

சிலப்பதிகார நிறைவாகிய வரந்தரு காதையில் இடம் பெறும் வேந்தருள் ஒருவன், "கடல்சூழ் இலங்கைக் கயவாகு வேந்தன்" என்பான் (30-160) அவன் உரைபெறு கட்டுரையில், "கடல்சூழ் இலங்கைக் கயவாகு என்பான் நங்கைக்கு நாட்பலி பீடிகைக் கோட்ட முந்துறுத்தாங்கு, அரந்தை கெடுத்து வரந்தரும் இவளென ஆடித்திங்கள் அகவையின் ஆங்கோர் பாடிவிழாக் கோள் பன்முறை எடுப்ப மழைவீற்றிருந்து வளம்பல பெருகிப் பிழையா விளையுள் நாடாயிற்று" என்று குறிக்கப் படுகிறான்.

இக்கயவாகுவின் காலம் கி.பி. 174-196 ஆகும். இவ்வேந்தன் இலங்கை வரலாறு கூறும் மகாவம்சத்து இடம் பெற்றவன் ஆவன்.

இம்மணிமேகலை, சிலம்புச் செய்திகள் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் என்பதும், இக்காலத்திற்கு முற்பட்டது திருக்குறள் என்பதும் தெளிவுபடும் செய்திகளாம். ஆதலால், திருக்குறளைக் கி.பி. ரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட நூலாகக் கொள்ளல் அன்றிப் பிற்பட்ட நூலாகத் தள்ளல் ஆகாது என உறுதி செய்யலாம்.

முதற்றமிழ்க்காப்பியம் சிலப்பதிகாரம். அதற்கு முற்பட்டவை தனித்தனிப் பாடல்களாகப் பாடப்பட்ட தொகை நூற்காலம். பத்துப்பாட்டில் நெடியது மதுரைக் காஞ்சி. 782 அடிகளைக் கொண்டது. எனினும் தனிப்பாடலேயாம். பதிற்றுப்பத்து, பத்தன் தொகுதி எனினும் தனித்தனிப் பாடல்களே! நூறன் தொகுதியாம் ஐங்குறுநூறும்,தனித்தனிப் பாடல்களே! இத்தொகைக் காலத்து நூல்களுள் ஒன்றான புறநானூற்றில் மணிமேகலை நூல் சுட்டியவாறே ஒரு திருக்குறள், அதன் பெயர்களுள் தலைசிறந்த அறம் என்னும் பெயருடன் இடம் பெற்றுள்ளது. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனை ஆலத்தூர் கிழார் பாடியபாட்டு (34) அது,