உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

பெயரால், முத்துவீரிய ஆசிரியர்க்குப் பின்னிருந்த ஒருவர், முத்துவீரிய இலக்கணத்தை முன்னேடாக வைத்துக்கொண்டு, வேண்டுமாறெல்லாம் வடசொற்களைப் பெருக்கிவைத்த போலிமையானது. ஆதலால், நாம் வேறு வகையிலேதான் தொல்காப்பியர் ஆய்வைத் தொடரவேண்டும். அம்முறையும் முன்னை ஆய்வாளர்கள் கொண்டதே அல்லாமல் புதுவது அன்றாம். அம் முறை, வாய்த்தசான்று கொண்டு, அதன் மேலே படிப்படியே கொண்டு செல்லும் நெறியாம்.

சான்றுகொண்டு மேற்செலல்!

சிலப்பதிகாரம் திருக்குறளை அப்படியே ஆள்கிறது. இது,

"தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுவாளைத் தெய்வம் தொழுதகை திண்ணிதால்" (23 : வெண்பா)

என்றும்,

"முற்பகற் செய்தான் பிறன்கேடு தன்கேடு

பிற்பகல் காண்குறூஉம் பெற்றியகாண்" (21:3-4)

என்றும் வருவனவற்றாலும் பிறவற்றாலும் புலப்படும்.

இத்தொடர் கொண்டு, திருவள்ளுவர் பயன்படுத்தி யிருக்கக் கூடுமே என்பாரும் உளர். அதற்கு மணிமேகலை மெய்ச்சான்று காட்டி வள்ளுவம் முற்பட்டது என்பதை நிறுவுகிறது. அது, திருக்குறளை ஆள்வதுடன் நூற்பெயர் சுட்டித் திருவள்ளுவர் பெயரும் சுட்டி விளக்கும் அருமையைக் கண்டுளோம். ஈண்டும் காண்க.

"தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் பெருமழை என்றஅப் பொய்யில் புலவன் பொருளுரை”

என்கிறது. அச்சு மாறாவடிவும், பொய்யில் புலவன் என்னும் பெயரும் கிடைத்தற்கரிய சான்றுகள் ஆகின்றன. முன்னரே கண்ட இதனைத் தேவை கருதியே மீளப்பார்க்கிறோம்! கூறியது கூறல் அன்று!

மணிமேகலை ஆசிரியர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார், சேர அடிகள் இளங்கோவுக்கு உழுவல் அன்பர். சிலப்பதிகாரக் காவியம் இயற்றத் தூண்டியவர்; அவர்க்குச் சிலப்பதிகார மதுரை நிகழ்வுகளைப்பட்டாங்கு உரைத்தவர்; நூல்