உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியர் காலம்

227

கடைச்சங்கம் கி.பி. 230-க்குள் முடிந்துவிட்டதென்பது ஆராய்ச் சியாளர் துணிபாகும். இக்குறிப்பின்படி நோக்கினால் தலைச் சங்கம் இற்றைக்கு 11716 ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கப் பட்டிருத்தல் வேண்டும் என்பது புலப்படும். தொல்காப்பியனார் தலைச்சங்கத் திறுதியிலும் இடைச்சங்கத்துத் தொடக்கத்திலும் வாழ்ந்தவர் என்பது முன்னர்க் குறிக்கப்பட்டது. களவியல் உரைகாரர் கண்ட ஆண்டுக் கணக்கின்படி நோக்கினால் இடைச்சங்கம் கி.மு.5320 இல் தொடங்கியதெனக் கொள்ளலாம். எனவே, ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்தின் மேலெல்லை கி.மு.5320 என்பது தெளிவாதல் காணலாம்" என்கிறார். (தமிழிலக்கிய வரலாறு தொல்காப்பியம் பக் : 105). மேலும், "தொல்காப்பியர் பாணினி காலத்திற்கு முற்பட்டவர்; பாரத காலத்துக்கும் முற்பட்டவர்; பாரதகாலம் கி.மு. ஆயிரத்தைந்நூறு நூற்றாண்டுகளுக்கு முன்னது; ஆதலால், கி.மு. 5320 தொல்காப்பிய மேலெல்லை என்றதே சரி" என்றும் கூறுகிறார் (மேற்படி பக்.117) மேலாய்வு

முச்சங்க வரலாறு கொண்டு முடிவு செய்வது என்றால், அகத்தியரே தொல்காப்பியரை அழைத்துவந்தார்; அவர் மாணவருள் ஒருவராகத் தொல்காப்பியர் பயின்றார்; ஆதியூழியின் அந்தத்தே தொல்காப்பிய நூலை இயற்றினார் என்பனவெல்லாம் எண்ணி அகத்தியர் காலம் - இராமாயண காலம் - தொல்காப்பியர் காலம் எனத் தனித்தனியே கொள்ள வேண்டாமல், எல்லாமும் ஒருகால எல்லைப் பரப்பினவாய் இருக்கும். இந்நிலையில், இராமாயண காலமும் இன்னது எனத் தெளிவு கொள்ள முடியா நிலையிலேயே பன்முகம் காட்டிக் கொண்டுள்ளது! பாரத காலம் முந்தியது; இராமாயண காலம் பிந்தியது என்பாரும் உளர்!

தமிழ் இலக்கியப் பெரும்பரப்பாகிய பாட்டு, தொகை களிலோ, அகத்திய வழிநூல் எனப்படும் தொல்காப்பியத்திலோ அகத்தியரைப் பற்றி எந்தவொரு குறிப்பும் இல்லை. அவரைப் பற்றி அறிய வாய்ப்பதெல்லாம், மணிமேகலை தொட்டும், அதன் பின்னதான நூல்களிலுமேயாம்! மருத்துவ நூல்கள் எண்ணற்றுச் சொல்லப்படுவன உள எனினும் அவை யெல்லாம் மிகப் பிற்பட்டவை. கம்பர் இராமாயணம், திருவிளை யாடல், கோயில் பற்றிய தொன்மங்கள் (புராணங்கள்) ஆகியன புனைவு வழிப்பட்டவை! பேரகத்தியத் திரட்டு என்பதோ அகத்தியர்