உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

ஒருவராம் இரா. இராகவ ஐயங்கார் குறிப்பையும், மேலெல்லை சுட்டியவராம் வெள்ளைவாரணர் குறிப்பையும் காணலாம்.

நச்சினார்க்கினியர், தொல்காப்பியர் நூல் செய்தது ஆதியூழியின் அந்தத்தே என்கிறார்.

அடியார்க்கு நல்லார், குமரியாறு கடல் கொள்ளப் பட்டதற்கு முன்னே நிலந்தரு திருவிற் பாண்டியன் தொல்காப்பியம் புலப்படுத்தி இரீஇனான் என்கிறார்.

பேராசிரியர், சகரர் வேள்விக் குதிரை நாடித் தொட்ட கடலகத்துப்பட்டுக் குமரியாறும் பனைநாட்டோடு கெடுவதற்கு முன்னையது என்கிறார்.

களவியலுரைகாரர், இடைச்சங்க மிருந்தார் அகத்தி யனாரும் தொல்காப்பியனாரும் எனவுரைத்து அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது கபாடபுரத் தென்ப. அக்காலத்துப் போலும் பாண்டிய நாட்டைக் கடல் கொண்டது என்கிறார்.

இவ்வுரையாளருள் நச்சினார்க்கினியர் நீங்கலாக மற்றை மூவரும் குமரியாறு கடல் கொண்டதற்கு முன்னரே தொல்காப்பியம் அரங்கேறிற்றென்று உடன்படுகின்றனர்.பாண்டி நாட்டைக் கடல்கொண்ட காலம் கி.மு.145 என்பது இலங்கைப் பௌத்த சரித்திரங்களைக் கொண்டு ஆராய்ந்து துணியப்பட்டது. இதனால், முற்பட்டவரேயாவர் என்பது தெளியலாம் என்கிறார் இரா. ராகவ ஐயங்கார். (தமிழ் வரலாறு: பக்.257-258)

தொல்காப்பியர் கி.மு. 145-க்குச் சிறிது

66

திருக்குறள், சங்க இலக்கியங்கள், பாரதப்போர், பாணினியம் ஆகிய இவற்றுக் கெல்லாம் முற்பட்டது தொல்காப்பியர் எனப் பல்வேறு சான்றுகளால் விரியக் கூறும் வெள்ளைவாரணர் பாண்டிய மன்னர்கள் கல்வி வளர்ச்சி குறித்து மூன்று முறை தமிழ்ச் சங்கங்களை நிறுவித் தமிழ் வளர்த்த வரலாறு, இறையனார் களவியலுரையினுள்ளே விரித்துக் கூறப் பெற்றது. தென்மதுரை நிறுவப்பெற்ற முதற்சங்கம் 4440 ஆண்டுகளும், கபாடபுரத்தில் நிறுவப் பெற்ற இடைச்சங்கம் 3700 ஆண்டுகளும், இப்பொழுதுள்ள மதுரையாகிய கூடல் நகரத்தில் நிறுவப்பெற்ற கடைச்சங்கம் 1850 ஆண்டுகளும் நிலை பெற்றிருந்தன எனக் களவியலுரை கூறுகின்றது.

களவியல் கூறும் இக்கொள்கையினைப் பின்வந்த உரை யாசிரியர் எல்லாரும் உடன்பட்டு ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.