உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியர் காலம்

225

வழிப்பட்டதே அடியார்க்கு நல்லார், நச்சினார்க் கினியர் முதலோர் குறிப்பிடும் செய்திகளும்.

என்ன வியப்பு! நூலாசிரியர் பெயர் இறையனார்! அவரை, இறைவனார் ஆக்கிவிட்டனரே! இறையன் வேறுபாடுமா தெரியவில்லை?

காலம் கண்டறிய வழி

இனி, இவற்றைக் கொள்ளாமல்

தொல்காப்பியர் காலத்தைக் கண்டறிய வழி என்ன?

-

றைவன்

தள்ளினால்,

வழிகள் இரண்டு: ஒன்று, நூலில் கிடைக்கும் அகச்சான்று. மற்றொன்று, அகச்சான்றாகக் கொள்ளக் கூடியவற்றுக்கு வாய்க்கும் புறச்சான்று. புறச்சான்று. இவ்விரண்டன் வழியாகவே தீர்மானிக்க வேண்டும். தொல்காப்பியரைக் கி.பி. ஆறாம் நூற்றாண்டு வரை இறக்கிய ஆய்வுகளைத் தள்ளுபடி செய்த நாம், கி.மு. பகுதியில் தொல்காப்பியரை ஏற்றியவர்கள் பெயர்களையும் அவர்கள் கண்டுரைத்த காலத்தையும் அறிவோம்: தெ.பொ.மீனாட்சிசுந்தரனார். கிறித்துவுக்கு முற்பட்டது

எனலாம்.

பி.டி.சீனிவாச ஐயங்கார் கி.மு.100 முதல் 200

இரா. இராகவ ஐயங்கார் கி.மு. 145

கே. சி. சங்கர ஐயர்

கி.மு. 300

ந.சி. கந்தையா பிள்ளை

கி.மு. 350

எம். சீனிவாச ஐயங்கார்

கி.மு. 350; 400

கே. கே. பிள்ளை

கி.மு. 400

மு. வரதராசனார்

கி.மு. 500

வி.ஆர். இராமச்சந்திரதீட்சிதர் கி.மு.500

ஞா. தேவநேயப் பாவாணர்

கி.மு. 700

சி.இலக்குவனார்

கி.மு. 700

சா.சோ.பாரதியார்

கி.மு. 1000

கா.சுப்பிரமணிய பிள்ளை

கி.மு. 2000

மறைமலையடிகள்

கி.மு. 3500

க. வெள்ளை வாரணனார்

கி.மு. 5320

இவ்வனையர் ஆய்வையும், அவர் கூறுவதைச் சுருக்கி உரைக்கினும் பெருக்கமாம் என்பதால், கீழெல்லை சுட்டியவருள்