உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

அவர், செல்லூர் ஆசிரியர் ஆண்டைப் பெருங்குமரனார்க்கு உரைத்தார்.

அவர், திருக்குன்றத்து ஆசிரியர்க்கு உரைத்தார்

அவர், மாதளவனார் இளநாகர்க்கு உரைத்தார்

அவர், முசிறியாசிரியர் நீலகண்டனார்க்கு உரைத்தார் இங்ஙனம் வருகின்றது உரை" என்பது.

நக்கீரனார் முதல் நீலகண்டனார் வரை, உரைத்த உரையை எழுதினார் எவர்?

இத்தனைபேர்கள் அச்சுவார்ப்படமென ஒப்பித்து வந்து இறுதியில் ஒருவர் எழுதினால் முதலாமவர் உரைத்த உரை, பழமாறாமல் எழுத்துப்படி - இருக்குமா?

போர்க்களத்தில் நின்று சங்கம் முரசு ஆயவை முழங்கிய பின்னர்ப் 'படை எடுக்க மாட்டேன்' என நின்ற பார்த்தனைப் பதினெட்டு நாள் போர்க்குக் கிளர்ச்சியுண்டாக்கப், பதினெட்டு மடலம் உரைத்தானாம் கண்ணன்! கீதைப்பேருரை அதுவாம்!

கண்ணன் உரைத்தான்; அதனை அவன் எழுதினான் அல்லன்; பார்த்தன் கேட்டான்; அவனும் எழுதினான் அல்லன்;

சஞ்சயன் கேட்டான்; அவனும் எழுதினான் அல்லன்;

திருதராட்டிரனும் கேட்டான்; அவனும் எழுதினான் அல்லன்; அன்றியும், பார்வையும் இல்லான்!

அப்படியானால் எவன் எழுதினான்?

எவனோ எழுதினான்! அது, கண்ண பெருமான் சட்டைமாட்டிக் கொண்டது!

இதற்கும், களவியல் உரை நடந்துவந்ததற்கும்

என்ன வேறுபாடு?

எவரோ நூல்செய்து எவர் தலையிலோ கட்டுகிறார் உண்மை இதுவே!

இறையனார், களவியலுக்கு வீறுமிக்க நடையில் உரை பெறும் பேறு நமக்கு எய்தினும், அதன் வரவுப் புனைவு ஒப்புமாறு இல்லை! அதனால், அப்படி அப்படியே, சங்கம் இருந்த காலம், புலவர் எண்ணிக்கை, கவியரங்கேறிய காவலர் எண்ணிக்கை என்பன வெல்லாம் கொள்ளத் தக்கனவாக இல்லை. அதன்