உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனச்

தொல்காப்பியர் காலம்

ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்!"

சேரமான் பெருஞ்சோற்றுதியஞ்

223

சேரலாதனை முரஞ்சியூர் முடிநாகனார் பாடிய பாடல். சிவராசர் அறியாமல் இராரே! கொடுத்தோய் என்றும் பொருந என்றும் "நடுக்கின்றி நிலீ இயரோ அத்தை” என்றும் முன்னிலைப்படுத்திக் கூறுவதை அறியாமல் இராரே! பாரத காலம் கி.பி. ஆறாம் நூற்றாண்டா?

பழங்குடி என்னும் திருக்குறள் ஆட்சிக்கு, "தொன்று தொட்டுவருகின்ற குடியின்கட் பிறந்தார்" என உரை எழுதி, "தொன்று தொட்டு வருதல் சேர, சோழ, பாண்டியர் என்றாற் போலப் படைப்புக் காலந்தொடங்கி மேம்பட்டு வருதல்", எனப் பரிமேலழகர் விளக்கம் எழுதியதை நினைப்பின் புறம்தள்ள இயலாதாம்.

தொல்பழந் தமிழ்மண்ணில், இம் மூவேந்தர் பெயரை அல்லாமல், எவர் பெயரை, எவர் ஆட்சியைக் கேட்க முடிந்தது? புறநானூற்றில் தலைச்சங்கத்தார் பாட்டும் உண்டு என்பார், மறைமலையடிகளார்! முரஞ்சியூர் முடிநாகர், தலைச்சங்கப் புலவருள் முதற்கண் குறிப்பிடப்படுவார் ஆவர்.

களவியல் உரை

இனி, இறையனார் களவியல் உரையின் நம்பகத் தன்மையை நாம் அறிதல் வேண்டும். பின்னே தள்ளிப் பார்த்தல் எப்படி முறையற்றதோ, அதே முறையற்றதுதானே, விருப்பம் போல் முன்னே தள்ளுவதும்?

"மதுரை ஆலவாயிற் பெருமான் அடிகளால் செய்யப்பட்ட நூற்கு நக்கீரனாரால் உரைகண்டு, குமாரசாமியாற் கேட்கப் பட்டது என்க. இனி, உரை நடந்துவந்தவாறு சொல்லுதும்".

மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் தம் மகனார் கீரங் கொற்றனார்க்கு உரைத்தார்.

அவர், தேனூர் கிழார்க்கு உரைத்தார்

அவர், படியங் கொற்றனார்க்கு உரைத்தார்.

அவர், செல்வத்தாசிரியர் பெருஞ்சுவனார்க்கு உரைத்தார். அவர், மணலூராசிரியர் புளியங்காய்ப் பெருஞ்சேந்தனார்க்கு உரைத்தார்.