உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

அவையம்

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

கூடல்,புணர், புணர்ப்பு, புணர் கூட்டு, அவையம், துறை, தொகை, மன்று, பொதியில் என்பனவெல்லாம் தமிழாய்ந்த- தமிழரங்கேறிய - அவையங்களின் பெயர் என்பதை அறியாத வர்களா கி.பி. எனப் பின்னுக்குத் தள்ளுவோர். அவையம் பண்டிதர் கூட்டம் என்று பொருள் தருகிறது செ.ப.க. அகராதி! மற்றைச் சொற்களைக் கண்டு கொள்ளவில்லை அது. கூடல் என்பது புலவர்களின் கூட்டம் ஆய்வு அரங்கேற்றம் ஆயவகையால் ஏற்பட்ட பெயர்தானே! முகில்கள் கூடி அழிக்க வந்ததாம் புனைவுவழிப் பெயரா கூடல்?

“ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி மாங்குடி மருதன் தலைவன் ஆக

உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பிற் புலவர் பாடாது வரைகஎன் நிலவரை”

எனத் தலையாலங்கானத்துச் செருவென்ற

பாண்டியன்

நெடுஞ்செழியன் வஞ்சினம் கூறுவது அவன் புரவாண்மைச்

சீர்மை அல்லவா!

மூவேந்தர்

"போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தானையர்"

என மூவேந்தரைக் குறித்தலால் தொல்காப்பியம் காலத்தால் மிகப் பிற்பட்டது என்கிறார் சிவராசர். இதனைச் சுட்டும் கே.கே.பிள்ளை அவர்கள்,"இம்முடிபு வரலாற்று நிகழ்ச்சி களுக்கு முற்றிலும் முரண்பாடானதாகும். காத்தியாயனர் கி.மு. நான்காம் நூற்றாண்டிலேயே சோழரைப் பற்றியும் பாண்டியரைப் பற்றியும் எழுதியுள்ளார். இந்த மன்னரைப் பற்றிய குறிப்புகள் ஹதீகும்பாக் கல்வெட்டுகளிலும் (கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதி) வருகின்றன. எனவே தொல்காப்பியர் தம் நூலில் அம்மூன்று மன்னரையும் குறிப்பிடுவதில் வியப்பேதுமில்லை" என்கிறார் (தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் பக்99) புறநானூற்றின் கடவுள் வாழ்த்தை அடுத்த முதற்பாட்டே "அலங்குளைப் புரவி ஐவரொடு சினைஇ நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை