உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியர் காலம்

221

என்பதை உறங்குதல் பொருளிலா ஆட்சி செய்தார்? அமைந்து செயல், விரைந்து செயல் பற்றியவை அல்லவோ இவை?

66

'தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் நீங்கா நிலனாள் பவர்க்கு"

என்றும் கூறினார். இது, சோர்வில்லாமை

மடியின்மைப்

பொருள் தருவது அல்லவோ! சான்றாகாததைச் சான்றாக்கி ஆய்ந்து முடிபு செய்தல் சால்பாகாதே!

ஒரை

ஓர்,ஓரி என்பவை இருவகை வழக்கிலும் இன்றுவரை வழங்குவன ஓரி-ஒப்பற்ற வீரன்,ஒப்பற்ற அவ்வீரன் குதிரை; ஓரி - ஒற்றைக் குரங்கு, ஒற்றை யானை, ஒற்றை விளையாட்டுக்காய்! ஓரை, ஒன்றுபட்ட நாள் கோள்; ஓரை - ஒத்த பெண்பாலர் கூடியாடும் விளையாட்டு! எ-டு : ஓரையாயம்! தொல்காப்பியர் ஓரையும் நாளும் என வழங்குவது கொண்டு, ஓரை என்பது ஹோரா என்னும் கிரேக்கச் சொல், வடமொழிக்கண் வந்து தமிழில் ஆயது என்பது சொல்லியல் அறிந்தார் சொல்லும் சொல் என எவர் கொள்வார்? ஏன், வேற்றுச் சொல், எனின், தமிழில் பொருளற்ற விரிவாக்க வேரும் விளக்கமும் அற்ற - சொல்லாக அல்லவோ இருக்கும்?

'ஓர்மனம்' என்பது ஒருவர் பெயர்! "முதுவாய் ஓரி முழவாக' “அணிநிற ஓரி பாய்தலின் திணிநெடுங்குன்றம் தேன்சொரியும்மே" என்பவை பழந்தமிழ் இலக்கிய ஆட்சிகள். ஓர்மை, ஒருப்பட்ட தன்மை "ஒருமை மகளிர்" வள்ளுவம்.

சங்கம்

-

இறையனார் களவியல் முச்சங்க வரலாறு கூறுகின்றது. அடியார்க்கு நல்லாரும் நச்சினார்க்கினியரும் நாவுக்கரசரும் (நன்பாட்டுப் புலவனாய்ச் சங்க மேறி) பிறரும் கூறும் சங்கம் என்னும் ஆட்சி, கி.பி.470 இல் தொடங்கப்பட்ட வச்சிர நந்தியின் திரமிள சங்கமே என்று கூறி, சங்கம் என்பது அக் காலத்துக்குப் பின்னை ஆட்சி என்று வெற்றிப் புன்னகை பூக்கின்றனர்! அவர்களுக்கு, ஒத்த ஒலிச் சொல் கண்டால் வடக்கே தாவும் நிலை இருந்தும், புத்தர் கண்ட மும்மணிகளுள் ஒன்றான சங்கம் சரணம் கச்சாமி ஏன் தோன்றவில்லை? தோன்றினால் புத்தர் காலச் சார்பு தோன்றிவிடுமோ? அது கி.மு. ஆறாம் நூற்றாண்டு அல்லவோ!