உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

கட்டமைந்த நூலைக் கட்டுக்குலைக்க முனைந்தோர், ஒட்டிய ஒட்டு என்பதை, அப்பகுதியில் உள்ள நூற்பாக்களே (75-85) தம் பல்லை இளித்துக் காட்டுகின்றன! இது போதாதென்று, வைசிகன் என்னும் சொல்லோ அப்பரடிகள் நகைப்புப்போல், "விலா இறச் சிரித்திட்டேனே" எனச் செய்கின்றது.

வைசிகன் என்னும் சொல் பழந்தமிழ்ச் சொல்லடை விலேயே இடம் பெறாத ஒரு சொல். தொல்காப்பியம், திருக்குறள், பாட்டு, தொகை, கீழ்க்கணக்கு, சிலம்பு, மேகலை, முத்தொள்ளா யிரம் என்பவற்றைப் பழந்தமிழ் எனக் கொண்டு செய்யப்பட்ட சொல்லடைவு (பிரெஞ்சு அகாதமி) அது. வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணி என்னும் குறள் கற்றார், வாணிகன் பெறுமே வாணிக வாழ்க்கை என்று எழுதுவாரே அன்றி, வைசிகனை இப்படி வம்புக்கு இழுப்பாரா? அதுவும் வைசியன் எனவும் தெரியாதான் வைசிகன் என ஒட்டிய பொருந்தா ஒட்டு இஃதல்லவா! எ-டு : தசமுகன் - தயமுகன். தசரதன் - தயரதன் (கம்பர்). வைகை - வையை (பரிபாடல்).

வைசிகனைத், தொல்காப்பியரின் நெற்றிப் பொட்டாக்கி ஆய்ந்தால், ஆய்வு முடிபு எப்படி இருக்கும்? முதற்கோணல் முற்றும் கோணலே!

தூங்குதல்

திருவள்ளுவர் பற்றி இட்டுக் கட்டிய கதையில், பொட்டுக் கட்டிய பாட்டு ஒன்று உண்டு!

“அடிசிற் கினியாளே அன்புடை யாளே

படிசொற் கடவாத பாவாய் - அடிவருடிப்

பின்தூங்கி முன்னுணரும் பேதாய் உனைப்பிரிந்தால்

என்தூங்கும் என்கண் எனக்கு?”

என்பது அது, தூங்கும் என்னும் சொல் உறங்கும் என்னும் பொருள் கொண்டது பிற்காலம். அச் சொல்லைப் பயன் படுத்தியுள்ளார் திருவள்ளுவர். ஆதலால், அவர் பிற்காலத்தவர் என்பது ஆய்வாகுமா?

திருவள்ளுவர்,

"தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க தூங்காது செய்யும் வினை”