உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொய்யில் புலவர்

தொல்காப்பியர் காலம்

219

நயன்மிக்க ஒரு செயலைச் செய்தார் மணிமேகலைச் சாத்தனார்.

“தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் பெருமழை என்றஅப்

பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்"

என்ற மணிமேகலை அடிகள், குறளினையும் (55) அதன் ஆசிரியரையும் தக்கவாறு போற்றிப் பாராட்டுகின்றன என்பதால் மணிமேகலைக்கு முந்தியது திருக்குறள் என ஒப்புக்கொள்ளச் செய்கின்றது. பாடலை அப்படியே ஆட்சிசெய்து, ஆசிரியர் பெயரையும் சுட்டிய திறம் தான் தட்டாமல் ஒப்பச் செய்துள்ளது! ஏன்?

"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு”

என்னும் குறளின் பிழிவாகச்,

"செய்திகொன்றார்க்கு உய்தி இல்லென அறம் பாடிற்றே"

என நூற்பெயரொடு செய்தியைச் சுட்டியும் அப்புறநானூற்றுப் பாடலுக்கு முற்பட்டது திருக்குறள் என ஒப்பமனம் வரவில்லையே ஆய்வாளர்களுக்கு. ஏன்? நான் பிடித்த முயலுக்கு....

“முந்தை யிருந்து நட்டோர் கொடுப்பின்

நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்'

95

என்னும் நற்றிணை அடிகளின் வரவு காண்பவர்க்குப்

“பெயக்கண்டும் நஞ்சுண் டடைமவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர்”

என்னும் திருக்குறள் நினைவு தோன்றாமல் இராதே! தோன்றாமல் இருந்தால், தோன்றக் கூடாது, தோன்றிவிடமாட்டோம் என்பதுதானே பொருள்?

வைசிகன்

தொல்காப்பியத்தின் மரபியலில்,

"வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை”

என ஒரு நூற்பா உள்ளது.