உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

முடிபு செய்யவேண்டுமோ அங்கே கண்ணை மூடிக்கொண்டு காலவிளையாட்டு விளையாடி விட்டார்கள்.

சிலசார்புகள், கட்டிப் பிடித்துக் கச்சிதமாக ஆடவைக்கும்

ஊழிக் கூத்து ஈது!

“சார்பு உணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்

சார்தரா சார்தரு நோய்"

என்பது எத்தகைய மெய்யியல் கோட்பாடு! இஃது அனைவர்க்கும் வாய்ப்பது இல்லையே.

தொல் பழமை

கலிப்பாவின் இலக்கணம், பரிபாடலின் இலக்கணம் அங்கதம் - முதுமொழி - பிசி-வண்ணம் - இவற்றின் இலக்கணம், தேவர்ப்பராஅய தேவபாணி, முப்பொருள் (முதல், கரு, உரி) ஐந்திணை, அகபுற, நிரைபு அசை, முப்பால் வகுப்பு, உரிப்பொருள் ஐந்து கொண்டே திருக்குறள் காமத்துப்பால் அமைத்துக்கொள்ளச் செய்த அருமை, கலிப்பாவைக் கொண்டே தாழிசை, துறை, விருத்தம் பெருக்கிக் கொள்ள வைத்த பெற்றிமை, குழந்தைப்பாட்டு முதலாம் சிற்றிலக்கியக் கொடை, மெய்யியல் வளம், நடுகல் விளக்கம், மரபியல் மாண்பு இன்னவை எல்லாம் கி.பி.ஐந்தாம் ஆறாம் நூற்றாண்டுப் பொருள்களா? தொல்காப்பியமே ஐந்தாம் ஆறாம் நூற்றாண்டு என்றால், திருக்குறளின் காலம் என்ன?

“நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப”

என்ற தொல்காப்பியச் சூத்திரமும்,

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும்

(தொல்.பொருள்.400)

என்ற திருக்குறளும் எதனை எது பின்பற்றியதென வரையறுத் துணர முடியாதபடி நம்மை மயக்குகின்றன என்கிறாரே வையாபுரியார். நல்ல மயக்கம் இல்லையா?