உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.பி.யா?

தொல்காப்பியர் காலம்

217

கிறித்துவிற்குப் பிற்பட்டுக் கிளர்ந்தது தொல்காப்பியம் என்பவர் பெயர்களும், அவர்கள் கண்ட ஆண்டு அடைவுகளும் வருமாறு.

பேரா. பெரிடல் கீற்று கி.பி.400ஆம் ஆண்டு

பேரா. ச.வையாபுரிப் பிள்ளை கி.பி.400-500ஆம் ஆண்டு பேரா . நீலகண்ட சாத்திரியார் கி.பி.500ஆம் ஆண்டு கே.என்.சிவராசப்பிள்ளை கி.பி.600ஆம் ஆண்டு

இவர்கள் காலக்கணிப்புச் செய்தார்களா, தொடுகுறி முத்துக்குறி போட்டு முடிபு செய்தார்களா? இவர்கள், கால ஆய்வுக்குக் கொண்டது இவர்கள் முடிபு செய்து கொண்ட பின்னுக்குத் தள்ளுதல் கொள்கை ஒன்று. மற்றொன்று, வடசொல்லிலும் தமிழிலும் இருக்கும் சொற்கள் எல்லாமும், ஒலி ஒப்பு, கருத்து ஒப்புச் சொற்கள் எல்லாமும் வடமொழிச் சொல்லே என முடிபு கொண்டுவிடுதல். அரும்பேராசிரியர் சேனாவரையர், தமிழ்ச்சொல் வடசொல்லுள் புகாது என முரட்டடி அடிக்க வில்லையா? ஐந்தெழுத்தால் ஒருபாடை என ஒரு தமிழ்ப்பிறவி (ஈசான தேசிகர் -தொல்காப்பியக்கடல்) - தமிழுக்கே பாடை கட்டவில்லையா? அப்படிப் பிறவிகளின் தொடர்ச்சியாக நாங்கள் உள்ளோம் எனத் தமக்குத் தாமே ஆவணப்படுத்திக் கொண்டவர்கள்.

இவர்கள் பெரிய பெரிய தமிழறிஞர்கள் அல்லரா?

இல்லை என எவர் சொன்னார்?

இவர்கள் ஆய்வுகள் பதிப்புகள் தமிழுக்கு ஆக்கமானவை என்பதைத் தவிர்க்க முடியுமா? தவிர்க்க வேண்டுவதுதான் என்ன? வையாபுரியாரின், சங்க இலக்கியப் பதிப்பு, நிகண்டுப் பதிப்புகள், புறத்திரட்டுப் பதிப்பு இவற்றுக்கு இணையாம் பதிப்பு இதுவரை உண்டா? இந்நாள் பதிப்புலகில் வையா புரியார் வான்மணி என விளங்குகிறார் எனத் திரு.வி.க.வினால் பாராட்டப்பட்டவர் அல்லரோ அவர்! வடமொழி முக்கால், தென்மொழி கால் எனச் செய்தது சென்னைப் பல்கலைக்கழக அகராதிப்பணி (லெக்சிகன்); அவ்வகர முதலியைப் புறந்தள்ள நினைவாராலும், புறந்தள்ள இயலாப் புகழ் உடையது அல்லவா அது! இவர்கள் நால்வரும் இவ்வாறே சிலச்சில வகைகளில் தேர்ந்தவர்களே! ஆனால் எங்கே எவ்வளவு விழிப்பாக ஆய்ந்து