உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

காலக்கணிப்பு

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

இனிப் பாரதகாலம், இராமாயணகாலம், கபாடவூழிக் காலம் என்பவை திட்டவட்டமாகக் கணிக்கப்பட்டுள்ளவையோ எனின், துல்லியமாகச் சொல்லும் நிலை ல்லை என்பதே முடிவாம்.

பாரதப் போர்க் காலம் கி.மு. 1400: கிமு. 1500

இராமர் காலம் கி.மு. 2300; கி.மு. 1950

"பாரத யுத்த காலம், கலியுக ஆரம்பத்தை ஒட்டி, இன்றைக்கு 5000 ஆண்டுகட்கு முன்பு என்பது நூல்களில் வழங்கும் பிரபலமான வழக்காகும். இதனை நம் நாட்டிலும் பிற நாட்டிலுமுள்ள சரித்திர ஆசிரியர் பலரும் நவீன ஆராய்ச்சி முறையில் சோதித்து வருவதில் அம்மகாயுத்தம் நடந்தேறியது இன்றைக்கு 3000 ஆண்டுகட்கு முன் (அஃதாவது கி.மு. 12-ஆம் நூற்றாண்டிடையில் என்று முடிவு கூறுகின்றனர்" என்கிறார் மு. இராகவஐயங்கார் (ஆராய்ச்சி தொகுதி. பக். 88)

இராமாயண காலத்து வாழ்ந்தவர் வால்மீகியார். இராமர் மக்களோடும் சீதையோடும் ஓரிடத்து உறைந்தவர் எனப்படு பவரும் அவர். ஆயினும், அவரியற்றிய இராமாயணம் கி.மு.300 என்பதும் உண்டு (பிரிட்டானிகா தகவல் களஞ்சியம்)

புத்தசாதகக் கதைகளிலேயே இராமாயணச் செய்திகள் இருக்கலாம் என்று டாக்டர் லேபர் கருதுகிறார் என்கிறது வாழ்வியல் களஞ்சியம். வால்மீகி இராமாயண காலம் கி.மு.மூன்றாம் நூற்றாண்டு என்கிறது. அதே களஞ்சியம் பாரதம் இயற்றிய வியாசர் காலம் கி.மு.பதினான்காம் நூற்றாண்டு என்பர் என்கிறது. (காலக் குறிப்பு அகராதி)

ஓர் உண்மை

இவற்றால் நாம் அறிவது ஓர் உண்மை, இராமாயண, பாரத் காலத்தை எவரும் கி.பி.க்குக் கொண்டு வரவில்லை.கி.மு. விலேயே நின்றன. ஆனால், இராமாயணப் பழமையர் எனப்பட்ட தொல்காப்பியரை கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு வரை கொண்டு வந்துவிட்டனர், தமிழுக்கு அதிகாரிகள் தாங்கள் எனக் கொண்டுவிட்டவர்கள்.