உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியர் காலம்

215

"எர்குலசு என்ற பெயரிய வீரனாகிய அரசனொருவன், பாண்டியை என்று சொல்லப்பட்ட ஒரே மகளைப் பெற்றான். அவ்வரசன் கடல்வரையுள்ள தென்பக்கத்து நாட்டு ஆட்சியை அவளுக்கு அளித்தான். அந்நாட்டை 365 ஊர்களாகப் பிரித்துத் தன்கீழ்ப் பட்ட சிற்றரசர்களிடம் அவற்றை ஒப்படைத்து ஒவ்வோர் ஊர்த்தலைவரும் தத்தம் திறைப்பணத்தை நாள்தோறும் அவளுக்குத் தவறாது அளித்துவரும் படி ஒழுங்கு செய்திருந்தான்" என்று கூறுகிறார் (மு. இராகவ ஐயங்கார்; ஆராய்ச்சித் தொகுதி-77).

கபாடபுர அழிவின் பின் பாண்டியன் இருந்த கடல்சார் ஊர் மணலூர். மணற்றி, மணற்றிடல் எனவும் வழங்கும். அம்மணற்றி பற்றிய அகக்கோவைப் பாடல்கள் இரண்டு இறையனார் களவியலில் மேற்கோளாக ஆளப்பட்டுள. அவை பாண் கோவை என்னும் நூல் சார்ந்தவை.

மணற்றி வென்றான் கன்னி வார்துறைவாள் (42)

என்றும்,

கடிமா மணற்றி மங்கை அமரட்டகோன் (178)

டிக்

என்றும் சுட்டப்படுகின்றன. அம்மணற்றி என்பது யாழ்ப்பாணம் பழம் பெயரேயாம். கவாடம் போலவே கடலகம் சார் மணற்றியும் தென்னகத் தீவகப் பகுதியேயாம். ஆங்கிருந்து அகநாட்டில் அமைக்கப்பட்ட தலைநகரே மதுரை என்க.

செய்திச் சுருக்கம்

இது காறும் கண்ட செய்திகளின் படி, தொல்காப்பியர் காலம் பாரத காலத்திற்கு முற்பட்டதாம் இராமாயண காலத்தது என்றும், அகத்தியரும் தொல்காப்பியரும் கற்பித்தாரும் கற்றாரும் ஆவர் எனின் அவர்கள் இருவரும் ஒருகாலத்தவரே என்றும், கூறுதல் வேண்டும்.

மற்றொரு வகையால், இடையூழிக் காலத்துக் கவாடபுரத்தில் அகத்தியரொடு தொல்காப்பியர் இருந்தார் என்றும், அவர்களின் நூல்கள் அளவை நூல்களாகக் கொள்ளப்பட்டன என்றும், அவ்விடைக் கழகக் கவாட அழிவின்பின் தொல்காப்பியமும் அகத்தியமும் அளவை நூல்களாகக் கொள்ளப்பட்டன ஆயினும், அவ்விருவரும் அவையத்திருந்தார் அல்லர் என்றும் கருதின், கவாட அழிவுக்காலம் கொண்டே தொல்காப்பியர் காலத்தின் இறுதியைக் கணிக்க முடியும் என்றும் கொள்ளல் வேண்டும்.