உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

கவாடத்து உண்டாகும் முத்தைப்பற்றி 2200 ஆண்டுகட்கு முற்பட்ட கெளடில்யாரும், தம் அர்த்த சாத்திரத்தில் குறிப் பிடுவதையும் "தாம்ரபர்ணிக பாண்ட்ய கவாடக சூர்ணேய" என முத்தின் வகைகளைக் குறிப்பதையும் இராகவர் உரைக்கிறார். வால்மீகி முனிவர் காலமுதல் கௌடில்யர் காலம் வரை புகழோடு விளங்கிய கவாட முத்து, கடல்கோளில் பின்னர்க் கொற்கை முத்து என ஆளப்படுதல்,

“கொற்கையம் பெருமுத்து” “முத்தின் கொற்கை"

(அகநா. 27) (மதுரைக் - 217)

என்பன. இக்கொற்கைமுத்து தாலமி முதலிய யவன ஆசிரியர் களால் சிறப்பிக்கப்படுவதாயிற்று. (1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம் பக்கம் 22, 23)

வடநாட்டுப் போர்வீரர் தலையில் பூச்சூடுதலைத் "தென்னாட்டார் போலத் தலைக்கணியாகப் பூச்சூடுகின்றனர்" என்று வால்மீகியார் கூறுவது, தமிழர் தம் அகவொழுக்கம் புறவொழுக்கங்களில் பெரிதும் இடம் பெற்று விளங்கிய பழமை விளக்கமாம். தொல்காப்பியத்தில்,

போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவும்

என்பதும், வெட்சித்திணை முதல் வாகைத்திணை ஈறாகப் புறத்திணையும், குறிஞ்சித்திணை முதல் பாலைத் திணை ஈறாக அகத்திணையும் பூவின் பெயரால் அமைந்தன என்பதும் சுட்டும் நம் பழைய ஆவணம் தொல்காப்பியம் தொட்டு இருத்தலால், வான்மீகியார் காலம், இராமர் காலம், அகத்தியர் காலம், தொல்காப்பியர் காலம் என்பனவெல்லாம் ஒரே காலமே எனக்கொள்ள நேரும்.

மணலூர்

டைச்சங்கம் இருந்த கவாட அழிவின் பின், பாண்டியன், மணலூர் (மணவூர், மணற்புரம் எனவும் வழங்கும்) என்னும் ஊரில் தலைநகர் அமைத்தான். அக்காலம் பாரத காலம் என்றும், அருச்சுனன் தென்னாடு வந்து பாண்டியன் மகளை மணந்த காலம் அது என்றும் கூறுவர். அக்காலத்து அரசி ஒருத்தி ஆட்சி நடத்தியதைப் பற்றி 2300 ஆண்டுகட்குமுன், மௌரிய சந்திர குப்தனிடம் யவனநாட்டுத் தூதராக வந்த மெகசுதனிசு என்பார்