உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியர் காலம்

213

வீற்றிருத்தல் என்பது ஆட்சி நடத்துதல் ஆகும். முச்சங்கக் காலம் முழுமையும் சேரினும் 9990 ஆண்டுகளேயாம்.

மாகீர்த்தியின் கால அளவும், சமதக்கினியார் மகனார் திரணதூமாக்கினியார் என்பதும் நச்சினார்க்கினியர் உரையா லேயன்றி வேறு வகையால் அறியவாராதவையாகும்.

'கீர்த்தி' அந்நாள் பாண்டியன் பெயரா? 'சீர்த்தி மிகுபுகழ்' என்பது தொல்காப்பியம். அதன் திரிபுச் சிதைவு கீர்த்தியாம்.

பரசுராமர் என்பார், இராமர்க்கு முற்றோன்றி இராமரோடு எதிரிட்டவர் என்பது கொண்டு எண்ணின், இராமாயண காலத்திற்குத் தொல்காப்பியரைக் கீழே கொண்டு வர இயலாதே.

பொய்யும் புனைவுமே வாழ்வாகிப் போன சில மதவெறியர், இராமர் 17 இலக்கம் ஆண்டுகட்கு முன் இருந்தவர் என்கின்றனர். இப்பொய்யர்க்கு நல்ல மறுமொழி, "பேரன் வயதைக் கூட்டிச் சொன்னால் பாட்டன் வயது குறைந்துவிடுமா? அப்பேரன் வயதுக் கூடுதல் போல பாட்டன் வயதும் கூடித்தானே போகும்?" என்பது. இராமனைப் பதினேழு இலக்கம் ஆண்டுகட்கு முந்தியவன் என்றால் தொல்காப்பியர் தொல்காப்பியர் காலமும் அந்த அளவுக்குப் போகத்தானே வேண்டும்? மெய்ம்மத்தை நாடும் ஆய்வே ஆய்வாம். தொன்மம் (புராணம்) பொய்ம்மத்தின் பூச்சே என்பது உலகறி செய்தி.

கபாடபுரம்

ஸ்ரீவால்மீகி முனிவரும் தென்னாடும் என்னும் கட்டுரையில் அறிஞர் மு.இராகவ ஐயங்கார், ஆந்திரம் புண்டரம் சோளம் கேரளத்தோடு கூடிய பாண்டிய நாடுகளைக் கடந்து மலைய மலையில் கதிரோனுக்கு ஒப்பாக விளங்கும் அகத்தியரைக் காண்பீர்கள் என்றும், பிறகு பொன் நிறைந்த தாயும் அழகுடைத் தாயும் முத்துமயமான மணிகளால் அலங்கரிக்கப் பட்டதாயும் பாண்டியர்க்கு யோக்கியமாயுமுள்ள கபாடத்தையும் பார்க்கக் கடவீர்கள். அதன்பின், சமுத்திரத்தை அடைந்து காரிய நிச்சயத்தைச் செய்யுங்கள் என்றும், வான்மீகியார் சீதையைத் தென்றிசைக் கண் தேடிச் செல்வாரை நோக்கிக் கூறியதாகக் கூறுகிறார்.

மேலும், கபாடபுரம் என்பது பழங்காலத்தே பாண்டிய ராஜதானியாய் இடைச்சங்க மிருந்து தமிழ் ஆராய்ச்சி செய்து வந்த நகரம் என்பதும், இக் கபாடபுரச் சங்கத்தில் தொல்காப்பியம் அரங்கேற்றப் பட்டது என்பதும் பிரசித்தம் என்கிறார்.