உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

பா வகையில் கலியும் பரியும் வழக்குக்குன்றித் தாழிசை துறை விருத்தம் என்னும் இனம் மிகப் பெருக்க முற்றது.

சிற்றிலக்கியங்கள் பெருக்க முற்றன.

தொன்மம், புராணம் என்னும் பெயரால் புனைபொருள் ஆகிவிட்டது.

தொன்மை என உரையொடு வழங்கிய பழைய வரலாறு இல்லாது ஆகியது.

உவமை என்னும் ஓரணி அணியியல் எனப் பெருகியது.

அகம் புறம் ஆகிய பொருள் திணை, துறைப் படுத்துப்பாடும் முறை அருகியது.

ன்னவாறு மேலும் பல மாற்றங்கள் ஏற்படுதற்கு நெடிய இடைவெளி யாகியிருக்கும் என்பது எளிதில் அறிவதாம். டைவெளி நெடிது, மிகுதி என்பதால் காலம் கணிக்கப் பட்டுவிடுமா? எனின், தொல்காப்பியம் தரும் அகச்சான்று களையும் அக்கால நிலைக்கு வாய்த்த புறச்சான்று களையும் கொண்டே முடிபு செய்தல் வேண்டும்.

அகச்சான்று

தொல்காப்பியர் காலத்தில் மூவேந்தர் ஆட்சி நிகழ்ந்தது. சேர, சோழ, பாண்டிய நாடு எனினும் அது மொழியால் செந்தமிழ் நிலமாக இருந்தது. அந்நாளில் தொண்டை நாடு தோற்றமாயிற்று இல்லை. அந்நாளில், தமிழகத்தே வடமொழியாளர் வரவால் அவர் மொழியும் வரலாயிற்று. ஆயினும் அவர் வழங்கிய வடசொல்லை வழங்குதல் ஆகாது. அப்படி வழங்க நேர்ந்தாலும் வடமொழி எழுத்தை ஏற்காமல் தள்ளித் தமிழ் மரபுக்குத் தகத் தமிழ் எழுத்தில் வழங்க வேண்டும் என்பவற்றைத் தொல்காப்பியர் கட்டளைப்படுத்துகிறார். ஆதலால், வடவர்தென்னாடு புகுந்த காலத்தைச் சார்ந்து, அவர்தம் மொழியைத் தமிழ் மண்ணில் பரப்பத் தொடங்கிய நாளில், மொழியாற்றுக்கு வகுத்த வலிய கரைபோல இலக்கணம் வகுத்துக் காத்தார்.

வடசொற் கிளவி வடஎழுத் தொரீஇ

எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே

என்பது அந்நூற்பா (884) தொல் காப்பு இயம் என்னும் பெயரீடு அறிக.