உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியர் காலம்

243

பாயிரத்தில் பனம்பாரனார் தமிழ் கூறு நல்லுலக எல்லையாக வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம் என்கிறார். வடக்கே கூறிய எல்லை தென்குமரி; இதுவும் மலையாகவே ஆதல் வேண்டும். அன்றி, ஆறோ, கடலோ ஆயின் அதனைக் குறிப்பிட்டிருப்பார்! ஆதலால், குமரிமலை ருந்த காலத்தில் தொல்காப்பியர் வாழ்ந்தார் என உறுதி செய்தல் வேண்டும்.

“பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்

குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள'

""

என்னும் சிலப்பதிகாரத் தொடர்கொண்டு குமரிக்கோடு கொடிய கடலால் கொள்ளப்பட்ட காலத்திற்கு முற்பட்ட காலத்தினர் தொல்காப்பியர் என்பதைத் திட்டப்படுதல் வேண்டும். அது, கவாடபுரத்துத் தமிழ்ச் சங்கம் தோன்றுவதற்கு முற்பட்டும், தென்மதுரைத் தமிழ்ச் சங்கம் அழிவுற்ற காலத்திற்குப் பிற்பட்டும் கொள்ள வேண்டும் காலம். அக்காலம் இடைச்சங்கக் காலம். கபாடபுர அழிவின்பின் தொல்காப்பியர் சங்கத் தலைமை இல்லாமையால் கபாடபுர அழிவுக் காலத்தொடு தொல்காப்பியர் இயற்கைக் காலம் எண்ணப்படவேண்டும். பாயிரத்தின் வழியாக அறியப் பெறும் அகச்சான்றுகளுள் தலையாய ஒன்று, தொல்காப்பியர் ஐந்திரம் நிறைந்தவர் என்பது. ஐந்திரம் வடமொழி இலக்கண முதல்நூல். அதன் மறைவுக்குப் பின் தோன்றியதே பாணினியம் என்னும் இலக்கண நூல். இவற்றால் தொல்காப்பியர் பாணினி காலத்திற்கு முற்பட்டவர் என்பதும் ஐந்திரக் காலத்தவர் என்பதும் விளங்கும்.

யவனர்

யகர வரிசையில் யா என்னும் எழுத்தையன்றி எவ் வெழுத்தும் சொல்லின் முதலாக வாராது என்கிறார் தொல்காப்பியர். ஆதலால், அவர் யவனர், யவனத்தூதர் வருகைக்கு முற்பட்டவர் எனக் கொள்ளல்வேண்டும். சங்கச் சான்றோர்,

“யவனர் தந்த வினைமாண் நன்கலம்” "யவனத் தச்சர்"

என வழங்குகின்றமை கொண்டு இதனைத் தெளியலாம்.

கயவாகு காலமும் செங்குட்டுவன் காலமும் ஒன்று எனச் சிலப்பதிகாரத்தின் வழி அறிவதாலும், அக்காலம் கி.பி.174-196 எனக் குறிக்கப்படுவதாலும், அச்செங்குட்டுவனுக்கு முன்னர்க்