உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264

கலைக்கொள்கை

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

கலையாட்டத்தால் வந்தது தானே கோவலன் நிலையட்டம்? கலைப்பிரிவின் விளைவு தானே கோவலன் கொலைப் பிரிவு மூலம்? “காதற் கணிகையின் கடற்கரைப் பாடல் கனக விசயர் கதிர்த்தலை முடியை நெரித்தது என்று

மாடலன் சொல்லியவாறு, அவ்வளவோடா முடிந்தது? எத்தனை சாவுகள்! அழிபாடுகள்!”

கலை கலைக்காக அன்றிப் பிறரை வெல்லும் கருவியாகப் பயன்படுத்தப்பட்டமையே சமண சமயக் கலைக் கொள்கை எனப் புலப்படல் அறியலாம்.

முத்தமிழ் நோக்கு அன்னது அன்று என்க.

தொல்காப்பியர் மாந்தர் உளவியல் கலையியல் இன்பியல் துன்பியல் மேலும் எண்ணும் பல்லபல இயல்களின் உயிர் நாடியாம் மெய்ப்பாட்டியலைக் கற்ற ஒருவர், அவ்வியலைப் படைத்தாரைச் சமணர் என எவ்வகையாலும் கொள்ளார்!

சுருக்கல் வேண்டா

ஒருவர் - அரிய பெரிய உரையாசிரியர், நச்சினார்க்கினியர், சமதக்கினியார் மகனார் திரண தூமாக்கினியாரே தொல்காப்பியர் என நெடுஞ்சரடு விட்டார்! இல்லாத அகத்தியரின் பொல்லாத மாணவராகவும் காட்டினார்! தொல்காப்பியரை வேத வழியர் ஆக்குவதிலே அவ்வளவு காதல்! அது போல் தொல்காப்பியரைச் சமணர் ஆக்குதல் வேண்டா! தமிழ் நெறி சிதையாமல் காக்கும் வகையில் இலக்கணம் இயற்றிய தமிழ் நெறித் தமிழர் தொல்காப்பியர் என்பதே ஆய்வுக்கும் ஆய்வர்க்கும் சால்பாம்! எச்சமயத்தினும் மேம்பட்டது மொழி இன நெறியாகும்! அந்நெறியைச் சுருக்கி விடல் ஆக்கச் செயலன்று என்க!

தமிழ் அறம்

இனித் தொல்காப்பியரைத் தன் சமயத்தவர் என்பதால் சமணம் பெறற்குள்ள பெருமை எதுவும் இல்லை. ஏனெனில் அதற்கும் சமணமதக் கோட்பாட்டுக்கும் தொடர்பு இல்லாத -ஏன்- மறுதலையும் பட்ட நூலால் அது பெறும் பேறுதான் என்னவாக இருக்க முடியும்!

தொல்காப்பியர் சமணர் அல்லர் என்பதால் தமிழிலக் கணம் கற்பார்க்குக் குறைவாவதும் எதுவும் இல்லை. தொல்காப்பியர் தொல்காப்பியராகவே இருக்க விடுவதே அருக அறமும் தமிழ்

அறமுமாம்.

முற்றிற்று