உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியர் காலம்

263

இதனால் ஆடவர் எனினும் மகளிர் எனினும் தவம் புரிதற்கும் வீடு பேறு பெறுவதற்கும் ஒத்த உரிமையரே என்பது தமிழ்த் 'தொல்காப்பிய நெறி' என்பது விளங்கும்.

காமம்

இசையும் நாடகமும் காமத்தை வளர்க்கும்; ஆதலால் அவற்றைக் கடிதல் (விலக்குதல்) சால்பு எனக் கொண்டவர் சமணர் என்றும், அக்கொள்கையால் இசையும் கூத்தும், அவற்றின் நூல்களும் இறந்தொழிந்தன என்றும் கூறுவர். ஆனால், அக்கொள்கை தமிழிலக்கியக் கலை உலகில் ஏற்கக் கூடுவதாகத் தோன்றவில்லை.

முதல் காப்பியமாம் சிலம்பு செய்துள்ள 'கலைமணம்' 'ஒன்றா இரண்டா? இசை, இசைக்கருவி, அரங்கம், ஆடல் திறம், வரிப்பாடல்கள் கொள்கை கொள்ளையாய் இல்லையா?

சிந்தாமணிக் காப்பியத்தில் யாழ் முதல் எத்தனை கலைகள்? பெருங்கதையும் தான் என்ன, கலையில் கடல் அல்லவோ? சமணர்கள் தங்கிய குகைகள் சிற்பக் கூடங்களும், ஓவியக் கூடங்களும் அல்லவோ!

சமண சமயத்தார் அகப்பொருளாகிய காதல் பற்றிப் பாடும் திறம் இல்லார் எனப் புலமையர் புகலத் திருத்தக்க தேவர் சிந்தாமணியை மணக்காப்பியமாகவே பாடினார் என்பதன் உள்ளீடு கருதத் தக்கது.

மேலும் அவர் ஆசிரியர் அச்சணந்தியார், காப்பியம் பாடும் திறம் தம் மாணவர்க்கு உண்டா என அறிந்து கொள்ள, ஓடும் நரியொன்றைக் காட்டி அதைப் 'பாடிவா' என ஏவப் பாடப்பட்ட நரி விருத்தம் முற்றாக நிலையாமையை வலியுறுத்துவதே என்பதை அறிந்து கொள்ளல் தெளிவாம். சமணர் இயற்றிய நூல் எனப்படும் நாலடியாரில் உள்ள இன்பத்துப்பால் அல்லது காமத்துப்பால் அப்பாலா, கழிசடைப் பாலா என்பதே வினாவாக எழும், சூடிக் கழித்த மலரன்ன இழிமைய நிலைகளையுடையவை. பட்டினத்தார் பெயரால் இட்டுக் கட்டி இடையே சேர்க்கப்பட்ட மகளிர் இழிமைக்கு முன் வரவு நாடிக் காமத்துப்பால்

எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தான் அமர்ந்து வரூஉம் மேவற் றாகும்

என்னும் தொல்காப்பியரா சமணர்?

(பொருள் இயல் 29)