உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

என்பவற்றைப் போற்றி ஒழுகிப் பாண்பாட்டின் கொள் கலங் களாகவும், அறத்தொண்டின் வழிகாட்டிகளாவும் மிகப்பல இருந்தமையால் அவர்களைச் 'சங்கச் சான்றோர்' என்றனர் என்க. இவற்றை ஆய்ந்து கொள்க.

அறிவினை 'அகன்ற அறிவு' எனக் குறிப்பிடும் வள்ளுவப் பெருந்தகையே, 'ஆன்ற அறிவு' என்றும் வழங்குதல் இச் சொல்லின் மூலங்காட்டிய முறைமை என மகிழத் தக்கதாம்.

“அஃகி அகன்ற அறிவு”

"ஆள்வினையும் ஆன்ற அறிவும்”

என்பவற்றைக் காண்க.

66

(திருக். 175)

(திருக். 1022)

'ஆன்றோர் செல்நெறி வழாஅச் சான்றோன்" (நற்.233) என்றது சான்றாண்மை இல்லானை எள்ளுதற்பட வந்த ‘அங்கதம்' ஆகும்.

ஆன்றோர் சான்றோர் இயல்புகள் தனித்தனித் தன்மைய வெனினும், ஆன்றோர் சான்றோராயும், சான்றோர் ஆன்றோராயும் அமைதலே உலகுய்க்கும் வழியாகும். ஆகலின் அத்தகைமை புலப்படுமாற்றான்,

"ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர்"

என்று விரிந்து விளக்கினர். (புறம்.197). "உண்ணாமையின் உயங்கிய மருங்கின் ஆடாப் படிவத்து அன்றோ! எனச் சான்றோர் தன்மையராய் ஆன்றோர் அமைதலையும் விளக்கிக் காட்டினர் (அகம். 123).

இனி, "அரம்போலும் கூர்மைய ரேனும் மரம் போல்வர் மக்கட்பண் பில்லா தவர்" என்று கூறுதலால், அறிவுக் கூர்ப்பும், பண்புக் கூர்ப்பும் உடைமையே பெரிதும் மதிக்கப்படும் ஆகலானும்,

66

'கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர்’

என்று கூறியவரே,

66

""

"கண்ணுக் கணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல் புண்ணென் றுணரப் படும்"

என இழித்துரைப்பார் ஆகலானும், அறிவு நலனும் பண்பு நலனும் வாய்ந்தாரே வாய்ந்தார் என்னும் கருத்தால் பிற்காலத்தில்,