உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லியன் நெறிமுறை - அகல்

37

ஆன்றோர் சான்றோர் வேறுபாடறக் கூறப்பெற்றனர் என்று தெளிந்துகொள்க.

அகன்ற அறிவாளரை ஆன்றோர், ஆன்றார், ஆன்றவர் என வழங்கினர். இச் சொற்களுக்கு, அறிவுடையோர், அமைந்தோர், தேவர், புலவர், நன்னெறியாளர் எனப் பல பொருள்களை அகர முதலிகள் குறிக்கின்றன. இவையெல்லாம் அகற்சி மூலத்துக் கிளைத்த பொருள்களே.

அறிவான் அகன்ற பெருமக்கள் ஆன்றோர் எனப் பெற்றனர். ஆனால், தலைவியைப் பிரிந்து செல்லும் தலைவன் பிரிவு, 'அகற்சி' எனப்பெற்றான். "நின்றான், இருந்தான், கிடந்தான், தன்கேள் அலறச் சென்றான்" என்பது உலகியற்கை ஆகலின், இறந்து பட்டாரையும் 'அகன்றார்' என்றனர். அவர் உற்றார் வீடு குடி அகன்று செல்பவர் ஆகலின் அப் பெயர்க்கு உரியர் ஆனார். புகையும் ஆவியும் காற்றும் மேலெழக் காண்கும் ஆகலின், இறந்தார் ஆவி மேலுலகு சென்றது என்னும் முடிவால் ஆவி வாழ்வினரை அல்லது தேவருலகு என்னும் விண்ணுலகு வாழ்வினரை 'அகன்றார்' என்றனர். இவ் வகன்றார்கள் எல்லாம் பொருள் வளர்ச்சிப் போக்கில் ‘ஆன்றோர் 'ஆன்றார்' 'ஆன்றவர்' எனப்பெற்றனர் என்க.

இவற்றுள் இடம் அகன்று பிரிந்து சென்றார் மட்டும் மாறாமல் 'அகன்றோர்' என்றே வழங்கப் பெற்றனர். ஏனையோர் 'ஆன்றோர்' எனப் பெற்றனர்.

“சேய்நிலைக்கு அகன்றோர்"

என்றார் தொல்காப்பியனார் (986) அவ்வாறு அகன்றவர் காடு கடந்து சென்றார். ஆகலின்,

“காடிறந்து அகன்றோர்”

என்றது அகம் (177). அவர்கள் செலவு நோக்கம் வெளிப்பட,

"ஆள்வினைக்கு அகன்றோர்"

"செய்பொருட்கு அகன்றோர்"

(நற். 69)

(குறுந். 190)

என விளக்கினாரும் உளர். பிரிந்த நிலையை,

66

‘ஏமம் செய்து அகன்றார்"

(குறுந். 200)

“காதல் செய்து அகன்றார்"

(கலி.129)

"இனிய செய்து அகன்றார்” “உள்ளாது அகன்றார்"

99

(கலி.129)

(கார்.27)