உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

'கம்பலை செய்து அகன்றார்"

(அகம்.227)

என்று விளக்கினாரும் உளர்.

'வளமை பெருகினார்' என்னும் பொருளில் வள்ளுவர், அகன்றாரைக் குறிக்கிறார் ஓரிடத்து.

"அழுக்கற்று அகன்றாரும் இல்லை"

என்பது அது (170)

"அல்லிடை ஆக்கொண் டப்பதி யகன்றோன்'

99

என மணிமேகலை ஆபுத்திரனைச் சுட்டுகின்றது (13,38)

அறிவான் அகன்ற ஆன்றோர் நெறி,

“ஆன்றோர் செல்நெறி”

எனப் பெறுகிறது நற்றிணையில்

(233)

ஆன்றோர் என்பது போல 'ஆன்றோள்' எனப் பெண்பாற் குறியீடு உண்டு என்பதைப் பதிற்றுப்பத்து குறிக்கிறது. 'ஆன்றோள் கணவ' என்பது அது. (55)

பொய்யறியாப் புகழாளர் ஆன்றோர் என்பதை

“அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க் கில்லை"

எனக் குறுந்தொகை குறிக்கிறது (184)

தேவர் உலகை, 'ஆன்றோர் உலகம்' என்று கலித் தொகையும் (139) 'ஆன்றோர் அரும்பெறல் உலகம்' என்று அகநானூறும் (213) கூறுகின்றன.