உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது நூல்கள் பதிப்பிப்பாரும், படிப்பாரும் பலர்! பலர்! புலமை நூல்களைப் பதிப்பிப்பாரும் படிப்பாரும் மிக அரியர். அவ்வருமைப்பாட்டையே தன் பெருமைப் பாடாகக் கொண்டு தொடக்க நாள் முதல் இடையீடில்லாத் தொண்டு செய்து வருவது சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் என்பது நாடறிந்த செய்தி. அம்முறையே முறையாகச் 'செந்தமிழ்ச் சொல்வளம்' என்னும் இந்நூலும் கழக வழியே வெளி வருகின்றதாம்.

கழக ஆட்சியாளர் திருமிகு இரா. முத்துக்குமாரசாமி எம்.ஏ, பி.லிப்; அவர்கள், செந்தமிழ்ச் சொல்வளத்தைக் கண்டதும் விழைந்தனர்; விரைவில் அச்சிட்டனர்; புது விருந்தெனத் தமிழுலகுக்குப் படைத்தனர். அவர்கள் விரும்பிய வண்ணமே இப்பணி, 'இணைச் சொல் அகராதி' (இணைச் சொற்களின் நுண்பொருள் வேறுபாடு) என்னும் ஆய்வாகத் தொடர்கின்றது. அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியுடையேன்.

தமிழ்வளம் நாடுவோர் இத்தகு முயற்சிகளுக்கு ஊக்குதலாக இருத்தல் நல்லபல விளைவுகளை நல்கும் என்பது உறுதியாம்!

பாவாணர் ஆராய்ச்சி நூலகம்,

தமிழ்ச் செல்வம், திருநகர்,

மதுரை-6.

தமிழ்த்தொண்டன்,

இரா.இளங்குமரனார்

26-3-'84.