உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தமிழ்ச் சொல்வளம்

அந்தமே மயமே யொண்மை

யாய்ந்தவா றேழுந் தானே

வந்திடு மழகின் பேராம்"

என்பார்.

79

இனி நிகண்டு நூல்களால் சுட்டப்பெறாத சொற்களும் உள. வெள்ளிவிழாப் பேரகராதி (ஜூபிலி பேரகராதி) யில் கண்டுள்ள சொற்கள் வருமாறு:

அணங்கு, அணி, அந்தம், அபிராமம், அமலம், அம், அம்மை, அலரி, ஆரியம், இராமம், இல்லிதம், இலாவண்யம், எழில், ஏர், ஐ,ஒண்மை, ஒப்பு, கவின், களை, காந்தி, காமர், காரிகை, குழகு, கொம்மை, கோலம், சந்தம், சவி, சாயல், சித்திரம், சீர், செவ்வி, செழுமை, சேடு, சொக்கு, சோபம், சௌமியம், தகை, தகைமை, தளிமம், தென், தேசிகம், தையல், தோட்டி, தோல், நலம், நவ்வி, நன்கு, நோக்கம், நோக்கு, பதம், பத்திரம், பந்தம், பந்துரம், பாங்கு, பூ,பை, பொற்பு, பொன், மஞ்சு, மஞ்சுளம், மணி, மதன், மயம், மனோகம்,மனோக்கியம், மாண்பு, மாதர், மாமை, மாழை, முருகு, யாணர், யௌவனம், வகுப்பு, படிவு, வண்மை, வளம், வனப்பு, வாகு, வாமம், விடங்கம்.

அன்றியும் பேரழகின் பெயர் அலங்காரம், கட்டழகு, காமர், சித்திரம், விசித்திரம், சிறப்பு, பொலிவு, மா. அழகு வகை - கொம்மை, மனோகரம், சுந்தரம், சித்திரம், சாரு.

நிகண்டு நூல்கள், அகரமுதலி நூல்கள் ஆகியவற்றில் காணக்கிடக்கும் அழகுபற்றிய சொற்களை ஓராற்றான் திரட்டித் தமிழ்ச்சொற்களைத் தேர்ந்து அவற்றை அகர முறையில் அமைத்துச் சிறிது விளக்கம் தந்தது இத் தொகுப்பாம். ஒவ்வொரு சொல்லின் ஆட்சிக்கும் எடுத்துக் காட்டும் வழக்காறும் காட்டின் விரிவாம் என்று அமைந்தாம்.

தமிழ்ச் சொல்வளம் காண விழைவார்க்கும், காட்ட விழைவார்க்கும் இத்தகு ஆய்வுகள் துணையாம் என்றும் இத் தமிழ்ச் சொல்வளம் சொல்லாக்கப் படைப்புகளுக்கு ஏந்தாம் என்றும் நூல்வடிவு பெறுகின்றதாம்.

நெல்லுக்குச் சொல்லென்பது ஒருபெயர்!

சொல்லின் பயன்பாடு கருதியது இவ்வாட்சியாம்.