உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

திவாகரர்க்குப் பின் வந்த பிங்கலர் அழகு என்னும் பொருள் தரும் சொற்கள் ஐம்பத்திரண்டு கூறுகின்றார்:

‘ஏரும் வனப்பும் எழிலும் இராமமும் காரிகையும் மாவும் அம்மையும் கவினும் செழுமையும் பந்தமும் தேசிகமும் நோக்கும் அணியும் அணங்கும் யாணரும் பாணியும் மாதரும் மாழையும் சாயலும் வகுப்பும் வண்ணமும் வளமும் பூவும் பொற்பும் சேடும் பொன்னும் சித்திரமும் பத்திரமும் மாமையும் தளிமமும் மயமும் மஞ்சும் மதனும் பாங்கும் அம்மும் சொக்கும் சுந்தரமும் தோட்டியும் ஐயும் ஒப்பும் அந்தமும் ஒண்மையும் விடங்கமும் அமலமும் குழகும் கோலமும் வாமமும் காந்தியும் அழகின் பெயரலங் காரமும் ஆகும்'

என்றும்

'கொம்மையும் மனோகரமும் சாருவுங் கூறுப்

என்றும் குறிப்பர்.சூடாமணி நிகண்டார் 42 சொற்களைச்

சொல்வார். அவை :

"எழில் வண்ணம் யாணர்

மாமை இராமமோ நவ்வி நோக்குச்

செழுமையே சேடு செவ்வி

சித்திரம் நலமே மாதர்

குழகொடு பொற்பு நன்கு

கோலமே மணிவ னப்புப்

பழிபடா விடங்கம் மாழை

55

பத்திரந் தோட்டி பாங்கு"

“சுந்தரம் அணங்கு மஞ்சு

சொக்குத்தே சிகமம் பொன்னே

சந்தங் காரிகைக வின்பூத்

தளிமமே வாமம் காமர்