உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தமிழ்ச் சொல்வளம்

77

எத்தகு அழகு பெறவல்லது! உலகமே, 'அளப்பரும் வளப்பெருங் காட்சி' என்றால் வளமை அழகேயன்றோ!

64. வனப்பு -வன்னிலம் எனப் பெறுவன முல்லையும் குறிஞ்சியுமாம். காடும் மலையும் கவின் கொள்ளைகள்; கைபுனைந் தியற்றாக் கவின்பெறு வனப்பின்; ஆகலின் வனத்தினின்று வனப்புச் சொல் அழகுக்கு வாய்த்ததாம். குறிஞ்சிக் கபிலனும் முல்லைப் பூதனும் வனப்பில் தோய்ந்து வளமுறப் பாடியவை தனிவனப்பினவாம்.

65.வாகு -அழகில் தோய்ந்த 'வாகு', 'வாய்த்தது' என்னும் பொருள் உடையதாம். 'கைவாகில் வை' என்பர். வாய்க்கில் வாக்கில் வாகில் என வந்ததாம். ஒழுங்கு என்னும் பொருள் வாகுக்குண்மை அகரமுதலிகள் சுட்டும் ஒழுங்குற அமைந்தது அழகெனக் குறித்ததாம்.

66. வாமம் - செல்வம், ஒளி, மார்பு முதலிய பொருள் தரும் வாமம் அழகும் சுட்டும். வாமன் வாமி என்பவை தெய்வக் குறிப்புடையவை. தாமரைக் கண்ணன், கண்ணன் எனக் கண்ணழகால் குறிக்கப் பெறுவன். அவனை வாமலோசனன் எனவும் திருமகளை வாமலோசனை எனவும் வடமொழியாக்கிக் காட்டல் இரு பிறப்பியாம். ரு

67. விடங்கம், விடங்கு ஆண்மையும் ஆற்றலும் கெழுமியதில் அழகும் திகழுமாகலின் இவை அழகெனப் பெற்றனவாம். விடபம், விடை, இடபம் எனப்பெறும் காளையின் அழகும் ஆற்றலும் அறிவோர் அதன் அழகையும் உணரக்கூடும். 'ஏறுபோல் பீடுநடை என்பதும், அதன் திமில் சிறப்பும் கருதுக. திவாகரம் சுட்டும் அழகின் பெயர்கள் :

“ஏர்வனப்பு எழில்யாணர் மாமை கேழ் தையல் காரிகை தோட்டி கவினே விடங்கம்

வாமம் வகுப்பு ஒப்பு மஞ்சு பொற்பு

காமர் அணிஇவை கட்டழ காகும்”

என்பதும்,

“நவ்வி அந்தம் பை பூபொலம் அற்புதம்

செவ்வி ஒண்மை மாண்பு ஐ சித்திரம் அழகே'

99

என்பதும் ஆக 29 சொற்களாம். இவற்றுள் அற்புதம் ஒழிந்த எல்லாச் சொற்களும் தமிழே.