உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

செம்பசுமை அல்லது பொன்பசுமை திகழும் தளிர்கள் அரும்பி அசையும் காட்சி, மரம் முழுவதையும் விலக்கித் தன் மாட்டே காண்பாரை வயப்படுத்துதல் கண்கூடு. ஆகலின் மாமை அழகு ஆயிற்றாம்.

57. மாழை - பொதுவில் உலோகப் பொருள்தரும் மாழை, சிறப்பாகப் பொன்னைச் சுட்டும். இனி 'மாழை மான்மட நோக்கி’ எனச் சுண்டியிழுக்கும் கவர்ச்சியும் மாழைக்கு உண்டு. ஆகலின் மாழை அழகே.

58. முருகு -அழகு, இளமை, மணம், தெய்வம் இன்ன பல உயர் பொருளையே சுட்டுவது முருகு. ஆகலின் முருகுறையும் மலையிடத்து இறைவனை முருகனாக மலைவாணர் கண்டு வழிபட்டனர். முருகனை அழகன் எனவும் குழகன் எனவும் கொண்டாடினர். தெய்வ முருகில் அழகு கொஞ்சுவதைச் சொல்ல வேண்டுமோ?

59. யாணர் - யாண், அழகு எனப்படும் யாணர் புது வருவாய் உடையவர் என்னும் பொருளது. மிகு வருவாய் உடைய வணிகர் 'கலியாணர்' எனப் பெறுவர். வளத்தைத் திருவாகக் கண்டவுள்ளம் வருவாயை யாணராக -அழகாகக் கண்டது.

60. வகுப்பு -வகுக்கப்பெற்றது வகுப்பு. வரன்முறையாக வகுத்துக்கொண்டு பாடப்பெறும் ஒருவகை நூல் 'புய வகுப்பு' எனப் பெறுகிறது. காடாகக் காணும் காட்சியிலும், வகுத்துக் காவாகக் காணும் காட்சி அழகுடையதன்றோ?

61. வடிவு

வடிவானது தோற்றம். தோற்றச் சிறப்பு அழகேயாகலின் வடிவு அழகெனப்பெற்றதாம். வடித்து எடுக்கப் பெற்ற சிற்பத்தின் அழகை என்னென்பது! கல்லைக் கனியாக்க வல்ல கலைத்திறம் வடிவேயன்றோ!

62. வண்மை - பல்வகை வண்ணங்களும் கெழுமிய தன்மை வண்மையாம். வண்ணத்தில் வனப்புக் கொஞ்சுவதால் தானே. உடுக்கும் உடைகளில் எண்ணரிய வண்ணங்கள்! வண்ணப் பூக்களைத் தேடி ஈக்களே மொய்க்குமானால் மாந்தரைச் சுட்டுவானேன்? விளம்பர உத்திகள் வண்ண உத்திகளாகப் பளிச்சிடுகின்றன அல்லவோ! இனி வளமைத் தன்மையாம் கொடையும் பாடு புகழால் அழகுறல் புறப்பாடலில் காண்க.

63. வளம் - வளம் செறிந்த இடமும் காட்சியும் உருவும் வளமாகவே சொல்லப்படுகின்றன. வளனற்ற ஒன்றே ஓவியத்தும் காவியத்தும் வளமுடையதானால், உண்மை வளமுடையது