உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தமிழ்ச் சொல்வளம்

75

49. பொற்பு, பொன் - பொலம் பொலிவு என்பன போல இவையும் பொன் வழியாக அழகைச் சுட்டும் சொற்களே. பொற்பு என்பது அழகேயன்றி அழகுறுத்து தலையும் சுட்டும். புனைதல் என்பதாம் அது.

50.மஞ்சு -மஞ்சு, 'மைந்து' என்பதன் போலி. 'மஞ்சன் கழல்' என்றார் கம்பர். மைந்தாவது வலிமை; 'ஆடவர்க்கு வினையே உயிர்' என்பராகலின் வினையாற்றற்குரிய வலிமை மைந்தர்க்குப் பண்பாகச் சுட்டப்பெறும். வலிமையுடைய இடத்து அழகும் பொதுளுதல் ஒரு தலை. ஆகலின் மஞ்சு அழகு எனப் பெற்றதாம். 51.மணி மணியானது ஒலியும் ஒளியுமாம். மணி மாணிக்கமும் அணிகலன்களுமாம். இனிய ஒலியும், எழில் வாய்ந்த ஒளியும், மணிக்கலன்களும் அழகின் இருக்கைய வாகலின் மணி 'அழகு' டைமையாயிற்றாம். இனிக் கண்ணின் மணியோ எவற்றிலும் அழகு விஞ்சியதாம். 'பாவை' என்பது அதன் அருமை காட்டும்.

.

52. மதன் - இளமையமைந்ததும், வாளிப்பு உடையதும் மதன் எனப்பெறும். மழலை மதலை எனப்பெறல் அறிக. "மதலையாய் வீழூன்றியாங்கு' என்பதால் மதலை மக்கட் சுட்டாதல் தெளிவு.மழ, குழ, என்பன போல மத என்பதும் இளமை சுட்டும். மதர்ப்பு என்னும் கொழுமையையும் மதன் காட்டும். ஆகலின் மதன் அழகாயிற்றாம்.

53.மா - பெருமை சுட்டும் மா, உரிச்சொல்; மாண்பின் மூலம். அழகுக்குத் தனிப் பெருமையுண்டாகலின் மா எனப் பெற்றது. அவையில், அழகர் சிறப்பு தனிச் சிறப்பாம். 'ஆடை பாதி ஆள் பாதி என்பது பழமொழி. செல்வ மகள் மாமகள் எனப்பெறுதலும் அறியத்தக்கது.

54.மாண்பு

-

மா என்னும் உரிச்சொல் வழிவந்த சொல் மாண்பு. அது, மா அழகாதல் போல, அழகு சுட்டும் சொல்லா யிற்று.

55.மாதர்-விருப்புக்கு உரியர் மாதர். 'மாதர் காதல்' என்பது தொல்காப்பியம். மாதர் அழகால் விருப்புக்கும், பண்பால் வழிபாட்டுக்கும் உரிமை பூண்டவர். தாய்மையும் இறைமையும் தங்கிய வடிவு மாதர் ஆகலின் 'அழகு' குறித்த சொல்லாயிற்றாம்.

56. மாமை - மாந்தளிர் போலும் நிறம் மாமை. பச்சைப் பசேல் எனத் திகழும் மாமரத்தின் கிளை நுனிதோறும்