உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

தருவதாலும் நக்கு என்பதற்கு அழகு உரியதாம், உள்ளக் கிளர்ச்சியால் உவகையைப் பெருக்கி உயிரை வளர்ப்பதாகலின்!

42. நோக்கம்; நோக்கு - நோக்குவார் நோக்கத்தைத் தன்னகத்தை விட்டு அகலா வண்ணம் நிலைபெறுத்துவது அழகு ஆகலின் நோக்கம் நோக்கு என்பவையும் அதன் பெயர் ஆயிற்றாம். மணிமேகலையார் அழகை, "ஆடவர் கண்டால் அகறலும் உண்டோ?" எனச் சாத்தனார் வினவுதல்வழி வியந்துரைத்த தறிக.

43. பதம் - பதம் - பக்குவம்; 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்னும் பழமொழியால் பதம் பக்குவமாதல் புலப்படும். பக்குவமாக அமைந்தது பதம் ஆயிற்று. பக்குவமாக அமைந்தது நாச் சுவையூட்டுவதுபோல எல்லாப் புலன்களுக்கும் சுவையூட்டும் எழிலும் பதம் ஆயிற்றாம்.

-

-

44. பாங்கு இணக்கம், உரிமை, தகைமை, பக்கம், முறை முதலிய பொருள்தரும் பாங்கு என்னும் சொல், அழகையும் சுட்டும். இடத்துக்கும் இயல்புக்கும் தக இணக்கமாக அமைதல் அழகின் இருப்பாம். வளமான பூங்கா எனினும் அதனிடம் பாங்கு அமையாக்கால் அதன் அழகு வயப்படுவது ஆகாதே! அழகின் அமைதியில் ஒன்றற்கு ஒன்று இணக்கமாதல் வேண்டத்தக்கதாம்.

பூ

45. பூ -வனப்பின் வைப்பகமாக ஒரு வனம் திகழ்ந்தாலும் அதன் பூவே முதற்கண் கொள்ளை கொள்வதாம். பூவின் அழகும் கவர்ச்சியும் மங்கல மாண்பும் அறிந்தோர் அழகையே பூவெனப் பெயரிட்டுப் போற்றினர் என்க. 'பொன் வைக்கும் இடத்தில் பூ' என்னும் பழமொழி பூவின் சிறப்பை உணர்த்தும்.

N

46. பை பை என்பது பைம்மை அல்லது பசுமை. பச்சை மணி பரப்பி வைத்தாற்போலத் திகழும் புல்வெளியில் வேறு செடி கொடி மரங்கள் இல்லையாயினும் அழகு நலம் உண்டாகலின் பசுமையும் அழகெனப்பெற்றதாம். பலவண்ணக் கலப்பு அழகு என்றால், ஒரே வண்ணப் பரப்பும் அழகெ எனக் கண்டது 'பை'

என்க.

47. பொலம் - பொலம் என்பது பொன். பொலங் கொடி என்பது பொற்கொடி. பொன்னின் அழகும் பொலிவும் மதிப்பும் எவரும் அறிந்தது. ஆகலின் பொலம், பொலிவு, பொற்பு, பொன் அழகைச் சுட்டினவாம்.

48.பொலிவு - பொன்னின் அழகு பொலிவு எனப் பெறும். நிறைவும் பொலிவாம். பொலிவான அழகு, அழகு பொலிகின்றது என்னும் தொடர்கள் பொலிவுக்கும் அழகுக்கும் உள்ள இணைப்பை விளக்கும்.