உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தமிழ்ச் சொல்வளம்

73

35. தென் - தென், தேனாம்; தேனார் இசையாம்; தேனுகர் ஈயாம்; தென்னி வளைந்த தென்னையாம்; 'தென்னா தெனா' என சை மாலையாம்! 'தென்னுண் தேனின் செஞ்சொற் கவி' என்றார் கம்பர். இனிய தென்னின் இயல்பறிந்தோர் 'தென்' என்பதற்கு அழகுப் பொருள் கண்டனர். அழகாய் அமைத்தனர்.

36. தையல் - 'மாதர் காதல்' என்பது தொல்காப்பியம். மாதரும் தையலும் வேறன்றே! ஆகலின் தையல் என்பதும் அழகுச் சொல்லாயிற்று. கோணல் மாணல் மரமாயினும் கல்லாயினும் ஒழுங்குறுத்தி,அறுக்கும் வகை அறுத்து, பொளியும் வகை பொளிந்து, இணைக்கும் வகை இணைத்து வனப்புறுத்தும் கலை 'தச்சு' ஆகும். தச்சு மரத்தச்சு, கற்றச்சு, கொற்றச்சு எனப் பல வகையாம். தச்சுக் கூலியே தசகூலியாம். இத் தச்சுத் திறம் 'தையல்’ என்க. இஃதழகுக் கலையெனல் வெளிப்படை யவனத் தச்சரும் இவணுறைந்தமை கழகச் செய்தி.

37.தோட்டி -தோட்டியாவது 'செல்லும் போக்கில் செல்லவிடாது' பற்றி இழுத்து நிறுத்தி வைப்பது. யானைத் தோட்டியால் புலனாம் இது. இவ்வாறே கண்டாரைத் தன் கண் நிறுத்த வல்ல அழகும் புனைவால் தோட்டி எனப் பெற்றதாம். கண்ணுள் வினைஞர்' என்னும் பெயரும் ஓவியர்க்குண்மை கருதத்தக்கது.

<

38. தோல் - தோல் ஆவது எண்வகை வனப்பினுள் ஒன்று. 'இழுமென் மொழியான் விழுமியது நுவலல்' தோல் வனப்பின் இயல்பாம். அழகு நடையில் அருமையான பொருளைக் கூறக் கேட்போர் வயப்படுவர் என்பது ஒருதலை. வயப்படுத்தும் சொல்லழகும் பொருளழகும் அழகே என்பதும் ஒரு தலை.

39. நலம் -நலமாவது நன்மை, மங்கலம், சீர்மை முதலிய பொருள் தரும் சொல். விருப்பும் கண்ணோட்டமும் இன்பமும் நலமாம். இவையுள்ள இடம் 'அழகு' உறையுள் எனற்கு ஐயமின்றே! ஆகலின் நலனும் அழகெனலாயிற்றாம்.

40.நவ்வி ளமைத் தன்மையும் மானும் நவ்வியாம். இளமையில் அழகுண்மை அறிந்ததே. மானின் அழகோ கலைமான் எனப் பெயரீட்டுரிமைக்கு இடனாயிற்று. நவ்வியம் புதுமைப் பொருள்தரும் சொல். புதுமைக் கவர்ச்சி எவருக்கும் உரியதே. ஆகலின் நவ்வி அழகு குறிக்கும் சொல்லாயிற்றென்க.

41. நன்கு - நன்றாக அமைந்தது நன்கு எனப்பெறும். அமையவேண்டிய அமைப்பின்படி அமைந்ததே அழகாக விளங்கும் ஆகலின் அழகு நக்கு எனப்பெற்றதாம். நன்மை