உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவவாக்கியர்

புத்த கங்க ளைச்சுமந்து பொய்க ளைப்பி தற்றுவீர் செத்தி டம்பி றந்திடம்ம தெங்ஙன் என்றே அறிகிலீர் அத்த னைய சித்தனை அறிந்து நோக்க வல்லிரேல்

உத்த மத்துள் ஆயசோதி உணரும் போகம் ஆகுமே.

107

472

அருளி லேபி றந்துதித்து மாயை ரூபம் ஆகியே

இருளி லேத யங்குகின்ற ஏழை மாந்தர் கேண்மினோ பொருளி லேத வம்புனைந்து பொருந்தி நோக்க வல்லிரேல் மருள்அ தேது வன்னியின் மறைந்த தேசி வாயமே. தன்ம சிந்தை ஆம்அளவும் தவம றியாத் தன்மையாய்க் கன்ம சிந்தை வெயில்உழன்று கருத்த ழிந்த கசடரே சென்ம சென்மம் தேடியும் தெளியொ ணாத செல்வனை நன்மை யாக உம்முளே நயந்து காண வேண்டுமே.

கள்ள வுள்ள மேயிருக்கக் கடந்த ஞானம் ஓதுவீர் கள்ளம் உள்அ றுத்தபோது கதிஇ தன்றிக் காண்கிலீர் உள்ள மேவி ளக்கிநித்தம் ஒளியை யணுக வல்லிரேல் தெள்ளு ஞானம் உம்முளே சிறந்த தேசி வாயமே. காண வேண்டும் என்றுநீர் கடல்ம லைகள் ஏறுவீர் ஆண வம்அ தல்லவோ அறிவில் லாத மாந்தரே வேணு மென்றவ் வீசர்பாதம் மெய்யு ளேத ரிப்பிரேல் தாணு வாக நின்றசீவன் தான்சி வம்அ தாகுமே.

அணுவி னோட கண்டமாய் அளவி டாத சோதியைக் குணம தாக உம்முளே குறித்து நோக்கின் முத்தியாம் மிணமி ணென்று விரலைஎண்ணி மீளொ ணாம யக்கமாய்த் துணிவி லாத படியினால் தொடர்ந்து பூசை செய்குவீர். எச்சில் எச்சில் என்றுநீர் இடைந்தி ருக்கும் ஏழைகாள் துச்சில் எச்சில் அல்லவோ தூய காயம் ஆனதும்

வைத்த எச்சில் தேனலோ வண்டின் எச்சில் பூவலோ கைச்சு தாவில் வைத்துடன் கறந்த பாலும் எச்சிலே. தீர்த்த லிங்க மூர்த்திஎன்று தேடி ஓடும் தீதரே தீர்த்த லிங்கம் உள்ளில்நின்ற சீவ னைத்தெ ளியுமே தீர்த்த லிங்கம் உம்முளே தெளிந்து காண வல்லிரேல் தீர்த்த லிங்கம் தான்அதாய்ச் சிறந்த தேசி வாயமே.

473

474

475

476

477

478

479