உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

இளங்குமரனார் தமிழ்வளம்

தீட்டம் தீட்டம் என்றுநீர் தினமும் முழுகும் மூடரே தீட்ட மாகி அல்லவோ திரண்டு காயம் ஆனது பூட்ட காயம் உம்முளே புகழு கின்ற பேயரே தீட்டு வந்து கொண்டலோ தெளிந்த தேசி வாயமே. ஊந்தி மேலே நாலு மூன்று ஓம்ந மசி வாயமாம் சந்தி சந்தி என்றுநீர் சாற்று கின்ற பேயரே முந்து வந்து நம்முளே மூல நாடி ஊடுபோய் அந்தி சந்தி அற்றிடம் அறிந்து ணர்ந்து பாருமே.

37

வன்னி மூன்று தீயினில் வாழும் எங்கள் நாதனும் கன்னி யான துள்ளிருக்கக் காதல் கொண்ட தெவ்விடம் சென்னி நாலு கையிரண்டு சிந்தை யில்இ ரண்டில் ஒன்று உன்னி உன்னி நும்முளே உய்த்து ணர்ந்து பாருமே.

தொண்டு செய்து நீங்களும் சூழ ஓடி மாள்கிறீர் உண்டு ழன்று நும்முளே உற்று ணர்ந்து பார்க்கிலீர் வண்டு ளாடு சோலைசூழ் வாழும் எங்கள் நாதனும் பண்டு போல நும்முளே பகுத்தி ருப்பன் ஈசனே.

பரம்உ னக்கெ னக்குவேறு பயம் இல்லை பாரையா கரம்உ னக்கு நித்தமும் குவித்தி டக்க டமையாம் சிரமு ருக்கி அமுதளித்த சீரு லாவும் நாதனே உரம்எ னக்கு நீஅளித்த உண்மை உண்மை உண்மையே. மூல வட்டம் மீதிலே முளைத்த ஐந்து எழுத்திலே கோல வட்டம் மூன்றுமாய்க் குளிர்ந்த லர்ந்து நின்றதீ ஞால வட்ட மன்றுளே நவின்ற ஞானி மேலதாய் ஏல வட்டம் ஆகியே இருந்த தேசி வாயமே.

முச்ச துர மூலமாகி மூன்ற தான பேதமாய் அச்ச துரம் உம்முளே அடங்க வாசி யோகமாம் மெய்ச்ச துர மெய்யுளே விளங்கு ஞான தீபமாய் உச்ச ரித்த மந்திரம் ஓம்ந மசி வாயமே.

464

465

466

467

468

469

470

இடங்கள் பண்ணி சுத்திசெய்தே இட்ட பீட மீதிலே அடங்க நீறு பூசல்செய்து அருந்த வங்கள் பண்ணுவீர் ஒடுங்கு கின்ற நாதனார் உதிக்கும் ஞானம் எவ்விடம் அடங்கு கின்ற தெவ்விடம் அறிந்து பூசை செய்யுமே.

471