உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவவாக்கியர்

தச்சு வாயில் உச்சிமேல் ஆயிரம்த லங்களாய் முச்சு டரும் மூவிரண்டு மூண்டெ ழுந்த தீச்சுடர் வச்சி ரம்அ தாகியே வளர்ந்து நின்ற தெவ்விடம்? இச்ச டரும் இந்தியமும் ஏக மானது எங்ஙனே? முத்தி சித்தி தொந்தமாய் முயங்கு கின்ற மூர்த்தியை மற்று தித்த ஐம்புலன்கள் ஆகும் மத்தி மப்புலன் அத்த னித்த காளகண்டர் அன்பி னால்அ னுதினம் உச்ச ரித்து ளத்திலே அறிந்து ணர்ந்து கொண்மினே. வல்ல வாசல் ஒன்பதும் மருத்த டைத்த வாசலும் சொல்லும் வாசல் ஓர்ஐந்தும் சொல்ல விம்மி நின்றதும் நல்ல வாச லைத்திறந்து ஞான வாசல் ஊடுபோய் எல்லை வாசல் கண்டபின் இனிப்பி றப்ப தில்லையே.

வண்டு பூம ணங்களோடு வந்தி ருந்த தேன்எலாம் உண்டு ளேஅ டங்கும்வண்ணம் ஓது லிங்க மூலமாய்க் கண்டு கண்டு வேரிலே கருத்தொ டுங்க வல்லிரேல் பண்டு கொண்ட வல்வினை பறந்தி டும்சி வாயமே. ஓரெ ழுத்தி லிங்கமாக ஓதும் அக்க ரத்துளே ஓரெ ழுத்தி யங்குகின்ற உண்மை யைஅ றிகிலீர் மூவெ ழுத்தும் மூவராய் முளைத்தெ ழுந்த சோதியை நாலெ ழுத்து நாவுளே நவின்ற தேசி வாயமே.

109

488

489

490

491

492

தூர தூர தூரமும் தொடர்ந் தெழுந்த தூரமும்

பார பார பாரம்என்று பரிந்தி ருந்த பாவிகாள் நேர நேர நேரமும் நினைந்தி ருக்க வல்லிரேல் தூர தூர தூரமும் தொடர்ந்து கூடல் ஆகுமே.

493

குண்ட லங்கள் பூண்டுநீர் குளங்கள் தோறும் மூழ்கிறீர் மண்டு கங்கள் போலநீர் மனத்தின் மாச றுக்கிலீர்;

மண்டை ஏந்து கையரை மனத்தி ருத்த வல்லிரேல்

பண்டை மால்அ யன்தொழப் பணிந்து வாழ லாகுமே.

494

கூடு கட்டி முட்டையிட்டுக் கொண்டி ருந்த வாறுபோல்

ஆடி ரண்டு கன்றைஈன்ற அம்ப லத்துள் ஆடுதே;

மாடு கொண்டு வெண்ணெய்உண்ணும் மானிடப்ப சுக்களே! வீடு கண்டு கொண்டபின்பு வெட்ட வெளியும் காணுமே.

495