உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

இளங்குமரனார் தமிழ்வளம்

37ஓ

நட்ட கல்லைத் தெய்வம்என்று நாலு புட்பம் சாத்தியே சுற்றி வந்து முணமுணென்று சொல்லு மந்த்ரம் ஏதடா! நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளி ருக்கையில் சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சு வைஅ றியுமோ? நானும் அல்ல நீயும்அல்ல நாதன் அல்ல ஓதுவேன் வனில் உள்ள சோதிஅல்ல சோதி நம்முள் உள்ளதே நானும் நீயும் ஒத்தபோது நாடிக் காண லாகுமே தான தான தத்ததான தான் தான் தானனா.

நல்ல தல்ல கெட்டதல்ல நடுவில் நிற்ப தொன்றுதான் நல்ல தென்ற போதது நல்ல தாகி நின்றுபின் நல்ல தல்ல கெட்டதென்றால் கெட்ட தாகும் ஆதலால் நல்ல தென்று நாடிநின்று நாமம் சொல்ல வேண்டுமே.

496

497

498

பேய்கள் கூடிப் பிணங்கள் தின்னும் பிரிய மில்லாக் காட்டிலே நாய்கள் சுற்ற நடனமாடும் நம்பன் வாழ்க்கை ஏதடா! தாய்கள் பால்உ திக்கும்இச்சை தவிர வேண்டி நாடினால் நோய்கள் பட்டு ழல்வதேது நோக்கிப் பாரும் உம்முளே.

499

உப்பை நீக்கில் அழுகிப்போகும் ஊற்றை யாகும் உடலில்நீ அப்பி யாசை கொண்டிருக்கல் ஆகு மோசொல் அறிவிலா தப்பி லிப்பொய் மானம்கெட்ட தடிய னாகும் மனமேகேள்: ஒப்பி லாச்செஞ் சடையனாகும் ஒருவன் பாதம் உண்மையே. பிறப்ப தெல்லாம் இறப்பதுண்டு பேதைமக்கள் தெரிகிலா திறப்ப தில்லை எனமகிழ்ந் தெங்கள் உங்கள் சொத்தெனக் குறிப்புப் பேசித் திரிவரன்றிக் கொண்ட கோலம் என்னவோ நிறப்பும் பொந்தி அழிந்தபோது நேச மாமோ ஈசனே?

சுட்டெ ரித்த சாந்துபூசும் சுந்த ரப்பெண் மதிமுகத் திட்ட நெட்டெ ழுத்தறியா தேங்கி நோக்கு மதிவலீர் பெட்ட கத்துப் பாம்புறங்கும் பித்த லாட்டம் அறியிரோ? கட்ட விழ்த்துப் பிரமன்பார்க்கில் கதிஉ மக்கும் ஏதுகாண். வேதம் ஓது வேலையோ வீண தாகும் பாரிலே காத காத தூரம்ஓடிக் காதல் பூசை வேணுமோ? ஆதி நாதன் வெண்ணெயுண்ட அவனி ருக்க நம்முளே கோது பூசை வேதம்ஏது குறித்துப் பாரும் உம்முளே.

500

501

502

503