உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவவாக்கியர்

பரம்இ லாத தெவ்விடம் பரம்இ ருப்ப தெவ்விடம்? அறம்இ லாத பாவிகட்குப் பரம்இ லைஅஃ துண்மையே; கரம்இ ருந்தும் பொருளிருந்தும் அருளி லாத போதது பரம்இ லாத சூன்யமாகும் பாழும் நரகம் ஆகுமே. மாதர் தோள்சே ராததேவர் மாநி லத்தில் இல்லையே! மாதர் தோள்பு ணர்ந்தபோது மனிதர் வாழ்சி றக்குமே மாத ராகுஞ் சத்தியென்று மாட்டிக் கொண்ட தாதலால் மாத ராகும் நீலிகங்கை மகிழ்ந்து கொண்டான் ஈசனே.

111

504

505

சித்தர் என்றும் சிறியர்என்றும் அறியொ ணாத சீவர்காள்! சித்தர் இங்கி ருந்தபோது பித்தர் என்றே எண்ணுவீர் சித்தர் இங்கி ருந்தும்என்ன பித்தன் நாட்டி ருப்பரே;

அத்தன் நாடும் இந்தநாடும் அவர்க ளுக்கெ லாமொன்றே.

506

மாந்தர் வாழ்வு மண்ணிலே மறந்த போது விண்ணிலே சாந்த னான ஆவியைச் சரிப் படுத்த வல்லிரேல் வேந்த னாகி மன்றுளாடும் விமலன் பாதம் காணலாம்

கூந்த லம்மை கோணல்ஒன்றும் குறிக்கொ ணாதிஃதுண்மையே. 507 சருக ருந்தி நீர்குடித்துச் சாரல் வாழ்த வசிகாள்! சருக ருந்தில் தேகங்குன்றிச் சஞ்ச லம்உண் டாகுமே; வருவி ருந்தோ டுண்டுடுத்தி வளர் மனைசு கிப்பிரேல் வருவி ருந்தோன் ஈசனாகி வாழ்வ ளிக்கும் சிவாயமே.

508

காடு மேடு குன்றுபள்ளம் கானின் ஆற கற்றியும் நாடு தேசம் விட்டலைவர் நாதன் பாதம் காண்பரோ கூடு விட்ட கன்றுன்ஆவி கூத்த னூர்க்கே நோக்கலால் வீடு பெற்ற ரன்பதத்தில் வீற்றி ருப்பர் இல்லையே.

கட்டை யால்செய் தேவரும் கல்லி னால்செய் தேவரும் மட்டை யால்செய் தேவரும் மஞ்ச ளால்செய் தேவரும் சட்டை யால்செய் தேவரும் சாணி யால்செய் தேவரும் வெட்ட வெளிய தன்றிமற்று வேறு தெய்வம் இல்லையே.

தங்கள் தேகம் நோய்பெறின் தனைப்பி டாரி கோயிலில் பொங்கல் வைத்தும் ஆடுகோழிப் பூசைப் பலியை இட்டிட நங்கச் சொல்லு நலிமிகுந்து நாளும் தேய்ந்து மூஞ்சூராய் உங்கள் குலத்தெய் வம்உங்கள் உருக்கு லைப்ப துண்மையே.

509

510

511