உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவவாக்கியர்

செம்மை சேர்ம ரத்திலே சிலைத லைகள் செய்கிறீர் கொம்மை யற்ற கிளையில்பாத குறடு செய்து அழிக்கிறீர் நும்மு ளேவி ளங்குவோனை நாடி நோக்க வல்லிரேல் இம்ம ளமும் மும்மளமும் எம்ம ளமும் அல்லவே. எத்தி சைஎங் கெங்கும்ஓடி எண்ணி லாத நதிகளில் சுற்றி யும்த லைமுழுகச் சுத்த ஞானி யாவரோ? பத்தி யோட ரன்பாதம் பணிந்தி டாத பாவிகாள்! முத்தி இன்றிப் பாழ்நரகில் மூழ்கி நொந்த லைவிரே.

கல்லு வெள்ளி செம்பிரும்பு காய்ந்தி டும்த ராக்களில் வல்ல தேவ ரூபபேதம் அங்க மைத்துப் போற்றிடில்

113

520

521

தொல்லை அற்றி டப்பெரும் சுகந்த ருமோ சொல்லுவீர்

இல்லை இல்லை இல்லைஇல்லை ஈசன் ஆணை இல்லையே.

522

இச்ச கம்ச னித்ததுவும் ஈசன் ஐந்தெ ழுத்திலே

மெச்ச வும்ச ராசரங்கள் மேவும் ஐந்தெ ழுத்திலே உச்சி தப்ப லஉயிர்கள் ஓங்கல் அஞ்செ ழுத்திலே நிச்ச யமெய்ஞ் ஞானபேதம் நிற்கும் ஐந்தெ ழுத்திலே.

சாத்தி ரங்கள் பார்த்துப்பார்த்துத் தான்கு ருடு ஆவதால் நேத்தி ரங்கெட வெய்யோனை நேர்து திசெய் மூடர்கள்! பாத்தி ரம்அ றிந்துமோன பக்தி செய்ய வல்லிரேல்

523

சூத்தி ரப்படி யாவரும் சுத்தர் அவர் அங்ஙனே.

524

மனவு றுதி தானிலாத மட்டிப் பிண மாடுகள்

சினமு றப்பி றர்பொருளைச் சேக ரித்து வைத்ததைத்

தினந்தி னம்ஊர் எங்கும்சுற்றித் திண்டிக் கேஅ லைபவர்

இனம தில்ப லர்கள்வையும் இன்பம் அற்ற பாவிகள்.

525

சிவாய வசி என்னவும் செபிக்க இச்ச கம்எலாம்

சிவாய வசி என்னவும் செபிக்க யாவும் சித்தியாம் சிவாய வசி என்னவும் செபிக்க வானம் ஆளலாம் சிவாய வசி என்பதே இருத லைத்தீ ஆகுமே. சிவவாக்கியர் முற்றிற்று.

526