உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குதம்பைச் சித்தர்

சித்தர் பெருமக்களுள் குதம்பைச் சித்தர் ஒருவர்.; சிவவாக்கியர் போல்வார் சித்தரே எனினும், சித்தர் பாடல் தொகுப்புகளுள் அவர்கள் பாடல்கள் இடம்பெற்றிருப்பினும், 'சித்தர்' பெயர் ஒட்டிக் கொள்ளவில்லை. ஆனால் குதம்பை யார்க்கோ 'சித்தர்' பெயரொட்டு எவ்விடத்தும் உண்டு.

'குதம்பை' என்பது விளிவடிவில் 'குதம்பாய்' என்று ஆகும் என்பது, இலக்கணநெறி, 'ஐ' என்பது 'ஆய்' ஆதல் என முறை காட்டுவர். தந்தை, 'தந்தாய்' என்றும், அன்னை, 'அன்னாய்' என்றும், குழந்தை 'குழந்தாய்' என்றும் வருவன காண்க.

குதம்பைச் சித்தரைக் 'குதம்பேய்ச் சித்தர்' என்கிறது அபிதான சிந்தாமணி. இவர் ஒரு சித்தர். பெண்களைப் பேய்களென எண்ணி உண்மையுணர்ந்து நன்மையடைந்தனர். இவர் செய்த நூல் குதம்பேய்ச் சித்தர் பாடல் என்றும் சொல்கிறது அது. இவர் பெயரை அப்படிச் சொல்லியும், பதிப்பித்தும், விளக்கம் கூறியும் வந்தவர்கள் இருந்தார்கள் என்பது இதனால் விளங்குகின்றது. முறையற்ற செய்திகள் இவை.

அகத்தைப் பேயாக உருவகித்துப் பாடல்தோறும் 'அகப்பேய்' என்றே விளித்துப் பாடிய சித்தர் 'அகப்பேய்ச்சித்தர்' எனப் பட்டார். அதனை நினைத்துக் கொண்ட ஒருவர், குதம்பேய்ச் சித்தரென இட்டுக் கட்டி உலாக் கொள்ளவும் விட்டிருக்கலாம்! குதம்பைக்கும் பேய்க்கும் எத்தொடர்பும் இல்லை. மாதரைப் பழித்துப் பாடும் பாடல்கள் உண்டு என்பதால், இப்பொருள் பொருந்தாது; ஏனெனில், உடலைப் பழிக்கிறார்; சாதிகளைப் பழிக்கிறார்; சமயங்களைப் பழிக்கிறார்; பொய்த்தவக் கோலங் களைப் பழிக்கிறார்; மகளிரை மட்டுமோ பழித்தார்?

‘நெஞ்சே' எனத் தன்னெஞ்சையே விளித்து அழைத்துக் கூறுவது உண்டு. முன்னிலையாரை விளித்துக் கூறுவது பெருவழக்கு. நடைமுறையிலேயே, அம்மா அப்பா, தங்காய் என்பனவெல்லாம் விளியால் பெற்ற பெயர்களே! அவையே முறைப் பெயர்களாக அமைந்து விட்டமை காண்க. அண்ணா,