உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

இளங்குமரனார் தமிழ்வளம் – 37

அக்கா, மாமா என்பனவும் விளி வடிவங்களே. இதனை வழக்கில் கண்டோர் இலக்கிய வழக்கிலும் ஆட்சி செய்தனர். ஆண் ஒருவனை முன்னிலைப்படுத்திக் கூறினால் அதற்கு, 'ஆடுஉ ' முன்னிலை என்றும், பெண் ஒருத்தியை முன்னிலைப்படுத்திக் கூறினால் 'மகடுஉ முன்னிலை' என்றும் இலக்கணப் பெயர் வழங்கினர். அறநூல் உரைப்பாரும் இவ்வழக்கத்தை மேற் கொண்டனர். நாலடியார், பழமொழி ஆகியவற்றில் இவ்விரு வகை முன்னிலைகளையும் நிரம்பக் காணலாம். யாப்பருங்கலக் காரிகை என்னும் இலக்கண நூல் காரிகையை முன்னிலைப் படுத்திக் கூறுவதால் பெற்ற பெயர் என்பதும் உண்டு. இந்நெறி சித்தர்கள் உள்ளத்தைக் கவர்ந்தமையால், அவர்கள் தாம் கூறும் மெய்ப்பொருள் விளக்கத்தை மகளிரை முன்னிலைப்படுத்தி அல்லது விளித்துக் கூறினர் என்க.

னிக், குதம்பை என்பதன் பொருளைப் பார்க்கலாம். குதம்பை என்பது 'குள்' என்னும் வேர் வழியாக வந்த சொல்லாகும். குடம்பை என்பதும் அவ்வேர் வழியாக வந்த சொல்லே! வட்டம் என்னும் பொருளில் குதம்பையும் குடம்பையும் வருகின்றன.

குதம்பை ஓர் அணிகலம்; அது மகளிர் அணியும் அணிகலம்; காதிற்கு அணியப்படுவது அது; மகளிர் அணிகலம் எனின் வளர்ந்தவர்களுக்கு உரியதன்று; ளமகளிர்க்கு அல்லது சிறுமியர்க்கு உரிய அணிகலமாம்.

அரைவடங்கள், கட்டிச் சதங்கை, இடுகுதம்பை, பொற் சுட்டி, தண்டை என இளஞ்சிறுமியர் அணிகளை அடுக்குவார் அருணகிரியார்.

முற்காலப் பெண்டிர் காது வளர்த்தனர். காது நீள நீளப் பெருமிதமும் கொண்டனர். கூந்தல் நீளத்திற்கு ஒரு பெருமை ருப்பது போலக், காது நீளத்திற்கும் அந்நாளில் ஒரு பெருமை ருந்தது. 'வடிந்து வீழ்காது' என்கிறார் இளங்கோவடிகளார். வடிந்து வீழ்காது என்பது தோளில் தட்டிக் கீழே புரளும் காது என்பதாம்.

காது நீளத்திற்குக் குணுக்கு என ஓர் அணிகலம் அணிந்தனர். காது குத்திப்,பஞ்சும் தக்கையும் வைத்துப் பின்னே குணுக்கு அணிவது வழக்கம். காது வலுவாக வலுவாகக் குணுக்கு எண்ணிக்கையும் பெருகும். அது, கீழே இழுத்து வடிந்து வீழ்காது ஆக்கும்! புடலைப் பிஞ்சு நீள்வதற்குக் கல் கட்டி விடுவது