உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குதம்பைச் சித்தர்

121

ல்லையா; அது போல் 'குணுக்கு' என்க; ஆனால், அஃதணிகலம் அன்றோ!

பூப்பு அடைந்தவர் குணுக்கு அணிவதில்லை. அதனைக் கழற்றிவிட்டால் ‘ஆளாகி விட்டாள்' என்பதற்கு அடையாளம். ஆளானவள், குணுக்கைக் கழற்றித் தங்கநகைகளாகிய தண்டொட்டி, பாம்படம் முதலியவற்றை அணிவாள். ஆதலால், குணுக்கு ஆகிய குதம்பை சிறுமியர் அணிகலமாம். இந்நாள் சிறுமியர், காது வளையம் போட்டுக் கொள்வதை ஒப்பிட்டுக் காணலாம். ஆனால், காது வளையம் சிறுமியர் அணிகலம் என்னும் நிலைமை மாறி, வளர்ந்தோரும் அணிவது அவர்கள் இளமைத்துடிப்பின் அடையாளமாகலாம்.

ஒவ்வொன்றையும் என்ன என்ன என்று அறிந்து கொள்ள அவாவும் பருவம், இளம் பருவம். அதனைப் 'புரிவு தெரியும் பருவம்' என்றும் கூறுவர். அப்பருவத்தே கற்க வேண்டுவன வற்றைக் கற்றல் வேண்டும் என்பாராய் 'இளமையில் கல் என்றார் ஔவையார். 'இளமைக் கல்வி சிலையில் எழுத்து' என்பது பழமொழி. ஆதலால் இளம்பருவத்தினரை முன்னி லைப்படுத்தி ஒன்றைக் கூறுதல் வழக்காறாகியது. தம்பி, தங்கை, பாப்பா, கண்ணம்மா என்றெல்லாம் விளித்துப் பாடும் பாடல் களை அறிந்தால் இது விளக்கமாம் குழந்தைகள், கதை கேட்ப தற்கும் ஆடல் பாடல் விடுகதை முதலியன நிகழ்த்துதற்கும் பெருவேட்கையர். ஆதலால், பெற்றோர்களையும் பெரியோர் களையும் எப்பொழுதும் சூழ்ந்திருப்பர். அவர்களை முன்னிலைப் படுத்திக் கூறுவது இயல்பான பொருத்தமாகும். இத்தேர்ச்சியே குதம்பையாரைத் தூண்டியிருக்க வேண்டும். இதன் விளைவே அவர்க்கே அப்பெயர் வாய்க்க வாய்ப்பாயிற்றாம்.

குதம்பையார் பாடும் பாடற் செய்திகளெல்லாம் குழந்தைப் பருவத்தினர்க்கு உரியவோ? அவர் பாடல்கள், குழந்தை இலக்கிய வகையைச் சார்ந்தனவோ? எனின் இல்லையாம்! அவை, முதிர்ந் தோர்க்கு உரியவையே! ஆனால் வாழ்வியற் கருத்துக்களைக் கேட்பதற்கு அகவை ஒரு குறுக்கீடு இல்லையே! திருக்குறள் கருத்து எவருக்கும் ஏற்றதே! அதன் கருத்து வளம், அகவை வளர் வளரப் பட்டறிவு முதிர முதிரச் சிறந்துகொண்டே செல்லும்! அந்நோக்கே தான் குழந்தைகளுக் கென்றே பாடப்படும் பாடல் களிலும், அறவுரைகள் அமைந்திருக்கக் காரணியமாம்.

இனிக் குதம்பைச்சித்தர் பாடல்களைப் பற்றிக் காணலாம். குதம்பைச் சித்தர் பாடல்கள் கும்மி மெட்டில் அமைந்தவை. முன்

?