உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

இளங்குமரனார் தமிழ்வளம் -37

ஓரடியும் வெண்டளையான் அமைந்த நாற்சீருடையது. இரண்டாமடி முதலடி முதற்சீருக்கு ஏற்ற எதுகையுடையதாகி ரு சீராய் இடை மடுத்துக் 'குதம்பாய்' என விளியுடையதாய் அவ்விரண்டாமடி இரு சீர்களுமே மடங்கி வருவதாய் அமைந்ததாம். ரண்டாம் அடி இரண்டாம் சீரும், அதன் மடக்காக வரும் அதே சீரும் மாங்கனிச் சீராகவே அமைகின்றது. வண்ணம் அறுத்தால்,

ரு

“தானன தானன தானன தானன தானன தன்னானன - தானன தானன தன்னானன.

>>

எனவரும். பெரும்பாலும் - ஒன்றிரண்டிடங்கள் தவிர எஞ்சிய இடங்களிலெல்லாம் இவ்வண்ணத்திலேயே அமைந்துள்ளன வாம். வெண்டளை பிழைத்தல் மிக அரிதாகவே உள்ளது.

குதம்பைச்சித்தர் பாடல்களாகச் சித்தர் பாடல் திரட்டு நூல்களில் அறியவருவன முப்பத்திரண்டேயாம். ஆனால் "யோக ஞான சாத்திரத் திரட்டு” என்னும் தொகுப்பில் குதம்பைச் சித்தர் பாடல் 246 காணப்படுகின்றன. அப்பகுதியின் பெயரே, "குதம்பைச் சித்தர் பாடல்" (246) என்பதேயாம். மற்றைத் தொகுப்புகளில் உள்ள முப்பத்திரண்டு பாடல்களும் இத் தொகுப்பில் 215 முதல் 246 வரை ஒரே தொடர்ச்சியாய்க் காணக்கிடக்கின்றன.

"யோக ஞான சாத்திரத் திரட்டு' ஏடு கொண்டு பதிப்பித்தது என்றும், "மதுரை திண்டுக்கல் ரோட்டு மங்காரு சுவாமியார்கள் குமாரர் முத்தியாலு நாயுடு அவர்களுடைய பிரதியின்படி அச்சிடலானது' என்றும் அந்நூலில் உள்ள குறிப்பால் அறியமுடிகின்றது. அன்றியும் குதம்பைச் சித்தர்பாடல், அத்தொகுப்பில் அறுபத்திரண்டாவது பகுதியாக வெளிப் பட்டுள்ளது என்பதும் கருதத்தக்கது.

சித்தர்கள் சமயம் உருவ வழிபாடு கடந்தது; பெயர் நிலையும் கடந்தது; கோயில் குளம்நீராட்டு, தேர்த் திருவிழா சடங்கு இன்னவை யெல்லாவற்றையும் பொருட்டாக எண்ணாதது. புறக்கோலங்களில் கருத்துச் செலுத்தாமல், அகவுணர்வு களிலேயே அழுத்தமாக ஊன்றி உயிர்களுக்கெல்லாம் உரிமைத் தொண்டு செய்தலையே உயிர்ப்பாகக் கொண்டது! ஆதலால், சித்தர்கள் பார்வை எல்லாமும், பொதுமையில் கனிந்த ஒருமைப் பாட்டிலேயே இயலக் காணலாம்.