உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல் தெளிபொருள்

1. கடவுள் வணக்கம் : (1-20) குதம்பாய்.

முழநிறை பொருளாம் இறைவனைக் கண்டோர் பிறவியை அறுப்பார்; அவர் இறப்பும் அடையார்; பிறந்து இறக்கும் சிறுதெய்வத்தை வணங்குவார், வீடுபேறு அடையார்; மெய்ப் பொருளைக் கண்டோர்க்குத் துயர் என்பதே இல்லை; பற்றற்ற இறைவனைப் பற்றினோர்க்குக் குற்றங்கள் இல்லையாம்; கண்ணுக்குத் தோன்றுவதும் தோன்றாததும் ஆகிய முதல்வனை உள்ளுள் காணவேண்டும். வெறும் பாழில் நிலைபெற்ற இறையை விருப்போடு அகத்தே பார்த்தல் வேண்டும்; எங்கும் நிறைந்த ஒளிப்பிழம்பாய் இறைவனை உடலுக்குள் உன்னிப்பாய்ப் பார்த்தல் வேண்டும். அண்டத்துக்கு அப்பாலாய் அமையும் இறைவனைப் பிண்டத்துள் காணவேண்டும்; குதம்பாய், ஆருயிர்த்துணையும் தெவிட்டா அமுதுமாம், இறைவன்; தூண்டா விளக்காய்த் துலங்குபவன், இறைவன்; உலகும் உயிரும் படைத்தவன் இறைவன்; எப்பொருளுக்கும் மேலாய் இருப்பவன், இறைவன். எவ்வுயிர்க்கும் உணவளிப்பவன், இறைவன்; காணற் கரிய ஊழி முதல்வன், இறைவன்; அணுவாகவும் அண்டமாகவும் ஆனவன், இறைவன்; மாணிக்கக் குன்றாகவும் செங்கதிர்களின் செல்வனாகவும் இருப்பவன், இறைவன். அவனை வழிபடுதல் வேண்டும்; தூயமனத்தையே காணிக்கைப் பொருளாகப் படைத்தல் வேண்டும்.

2.கடவுள் திறம் கூறல் : (21-50)

குதம்பாய், இறைவன் தேவர் றைவன் தேவர்களாலும் சித்தர்களாலும் தேடப்படுபவன்; அவனே முதல்வன்; அவனே மூவரும் ஆனவன்; அவனே அழியாப்பொருளும், அழியும் பொருளும், இயங்கு பொருளும், நிலைபொருளும், உருவப்பொருளும், அருவப் பொருளும், ஒளியும், வெளியும், தீயும், நெருப்பும், காற்றும், விண்ணும், மண்ணும் எல்லாமுமாய் ஆனவன்; உலகை நொடிப் போதில் அழிப்பவன் அவனே; அவன் அசையா விடில் அணுவும் அசையாது. குதம்பாய், காரணம் அறிவென்றும், காரியம் மெய்யென்றும் மறைநூல் கூறும்; காரணம் முற்பட்டதென்றும்,